எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

“ராகுல்ஜி, ‘அவர்கள்’ திருத்த முடியாத திருடர்கள்! தண்டனைக்குரியவர்கள்!!”



ந்த நாட்டைத் தங்களின் நிரந்தரக் கொள்ளைக் களமாக்க, தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்து, களவாணிக் கூட்டத்தார் செய்யும் தில்லுமுல்லுகளைப் போதிய ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள்.

உங்களைச் செயல்படாமல் முடக்குவதற்கு வழக்கு மேல் வழக்குப் போட்டுத் தொல்லை கொடுக்கிறார்கள்.

எதற்கும் அஞ்சாமல், கண்டன அறிக்கைகள் மூலம் அவர்கள் செய்யும் அட்டூழியங்களை மக்கள் மன்றத்திற்கு நீங்கள் கொண்டுசெல்வதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

ஆயினும், 

நம் மக்களிடம் உள்ள முக்கியப் பலவீனம்.....

தாமாக ஒருங்கிணைந்து கிளர்ந்தெழுந்து, திருடர்களுக்கு எதிராகப் போராடும் வழக்கம் அவர்களுக்கு இல்லை; தூண்டுபவர்கள் தேவை.

அதைச் செய்ய உங்களால் மட்டுமே இயலாது.

அவர்களை விரட்டியடிக்கும், அல்லது தண்டிக்கும் வகையறியாமல் தவித்துக்கொண்டிருக்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் கர்னாடகா[உங்கள் கட்சி ஆளுகிறது] போன்ற மாநில மக்களையும், இயன்றவரை பிற மாநில மக்களையும் ஒருங்கிணைத்துத் திட்டங்கள் வகுத்துப் போராடுதல் அவசியம்.

அதற்கான முயற்சியை உடனடியாக மேற்கொள்ளுங்கள். 

விரைவில் பெரும் போராட்டம் ஒன்றை அறிவித்துத் திட மனதுடன் அதைத் தலைமைதாங்கி நடத்துங்கள்.

வெற்றி 100% உறுதி!

வாழ்த்துகள்!