எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

மோடியின் சுயநலத்தால் சீர்குலைந்த இந்தியா - அமெரிக்கா நல்லுறவு!

மெரிக்காவுடனான இந்தியாவின் உறவு பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியப் பொருள்களுக்கான அமெரிக்காவின் வரிவிதிப்பு உயர்வால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து இந்தியப் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்*; மக்களிடையேயான வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன.

இழப்புகள் ஓரளவுக்கே[திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பது செய்தி] ஆயினும், அது நேர்வதற்கு மோடியின் சுயநல அரசியலே காரணமாக உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குத் தான்தான் காரணம் என்று டிரம்ப் சொல்லியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து ஏற்க மறுத்து[ஏற்பதால் பாதிப்பு ஏதுமில்லை], பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் அது நிறுத்தப்பட்டது என்று மோடி சொல்லிக்கொண்டிருந்தது ஏன்?

‘டிரம்ப்’பின் கூற்றை[29 முறை பொய் சொல்லும் அளவுக்கு அத்தனைப் பெரிய பொய்யரா டிரம்ப்?] மறுக்காமலும், பாகிஸ்தானின் தோல்வியைத் திரும்பத் திரும்பச் சொல்லி எள்ளி நகையாடாமலும் மோடி இருந்திருக்கலாம்.

பாகிஸ்தானை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்திப் பேசியதால்[அடி மேல் அடி வாங்கிக் குப்புறக் கவிழ்ந்து கிடப்பவன் புட்டத்தில் மீண்டும் மீண்டும் எட்டி உதைப்பது போன்ற அடாத செயல் இது] இந்தியாவுக்கு விளைந்த பலன் 0%தான்.

இதன் மூலம் இந்திய மக்களிடையேயான தனக்குள்ள மதிப்பு[?] பல மடங்கு உயரும் என்று நரேந்திர மோடி நம்பினார்.

பாவம் மோடி, இதனால்(ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது உண்மைக் காரணம் அல்ல. டிரமப்பும் புடினுமே போனில் அவ்வப்போது உறவாடுகிறார்கள்) அவர் எதிர்பார்த்தது நடந்ததோ அல்லவோ, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு மிகக் கடுமையாகச் சிதைந்தது; பொருளாதாரப் பின்னடைவும் நிகழ்ந்தது. இவற்றிற்கு இவருடைய சுயநல அரசியலே காரணம்!

                            *   *   *   *   *

*https://www.hindutamil.in/news/business/1372244-us-president-trump-orders-50-percent-tariff-on-india-economic-impact-1.html