எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

மலரல்ல அது; ஆனாலும், கசக்கிக் காலால் மிதித்தும் கமகமத்தது!!!

 தோ ஒரு பூ.

ஒரு முறை அதைக் கடந்து போனேன்;


மீண்டுவந்து 

பறித்து முகர்ந்தேன்;

சிறு சிறு துகள்களாக்

கிள்ளிக் கிள்ளித் தரையில் உதிர்த்தேன்;

காலால் மிதித்தேன்;


பொறுக்கி எடுத்து நசுக்கினேன்;


கசக்கினேன்.


என்ன செய்தும்.....


அதை முகர்ந்தபோது

கமகமத்து மணம் பரப்பியது.

பெற்ற தாயின் நினைப்பு வந்தது!

* * * * *

*** இது சுட்ட கவிதை. முகவரியைச் சேமிக்காததால் உள்மனம் சுடுகிறது!