செவ்வாய், 15 செப்டம்பர், 2026

சொந்தக் கட்சிக்குச் ‘சூனியம்’ வைக்கும் சண்முகமும் வீரபாண்டியனும்!!

//தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் மதுராந்தகம் & தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் பொதுவுடைமைக் கட்சிகள்(இடதுசாரிகள்) தனித்து போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன//[ஊடகங்கள்].

//பாஜக அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கவே தவெக அரசுக்கு அளித்து வரும் வெளிப்புற ஆதரவு தொடரும் என்றும், இதனால் தவெக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் பெ.சண்முகம்[+வீரபாண்டியன்] தெளிவுபடுத்தினார்//[ஊடகம்].தமிழ்நாடு இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், ஜோசப் கட்சி ஆட்சியைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்று இவர்கள் சொல்வது முரண்பாடானது.

இடைத் தேர்தலில் போட்டியிடுகிற இவர்களுக்கு, ‘தவெக’ ஜோசப் உட்படப் போட்டியிடுகிற அனைத்துக் கட்சிக்காரர்களும் எதிரிகள்தான்.

தங்களின் வேட்பாளர்கள் வென்றால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுவதோடு, மற்றவர்கள்[+தவெக] வென்றால் விளையும் தீங்குகளையும் சுட்டிக்காட்டுவது தவிர்க்கவே இயலாதது. தவிர்க்கக்கூடாததை எப்படித் தவிர்ப்பார்கள் சண்முகனாரும் வீரபாண்டியனாரும்?

தவிர்த்தால்.....

இவர்களுக்கு ‘வேடதாரிகள்’, ‘பச்சோந்திகள்’, ‘குழப்பவாதிகள்’ என்றெல்லாம் முத்திரை குத்துவார்கள் தமிழ் மக்கள்.

அப்புறம் இவர்கள் தனித்துப் போட்டியிட்டபோதெல்லாம் கிடைத்த கொஞ்சம் வாக்குகளையும், இந்த இடைத் தேர்தலில் பறிகொடுக்க நேரும்; காலப்போக்கில் தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் அழியும். 

திங்கள், 14 செப்டம்பர், 2026

கூரு கெட்ட தமிழனும் கொட்டமடிக்கும் கூத்தாடி ஜோசப்பும்!!

க்களின் வரிப்பணத்தில் முதலமைச்சர் சொகுசுப் பயணம் மேற்கொள்வதாகவும், மாநிலத்தில் விவசாயிகள் & மீனவர்கள் பிரச்சினைகள் இருக்கும்போது இதற்கு அவசியமில்லை என்றும் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, லண்டன் பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த எந்தத் தகவலோ, அல்லது தொழில்முனைவோர்களைச் சந்தித்த புகைப்படங்களோ இதுவரை வெளியாகவில்லை என்று சாடியுள்ளார்.

தமிழக பாஜக தரப்பில் நைனார் நாகேந்திரன், லண்டன் பயணத்திற்காகச் செலவிடப்படுவது அரசுப் பணம்.  ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவற்றின் மூலம் அறியத்தக்கது என்னவென்றால்.....

மக்கள் வரிப்பணத்தில் சொகுசுப் பயணம் மேற்கொள்ளவும், கூத்தாடி கூத்தாடிச்சியைச் சந்தித்துக்  குதுக்களிக்கவும்[+கார் பந்தயத்தை வேடிக்கை பார்த்தல்]தான் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் மூலம் அத்துபடியாய் உணரத்தக்கது.....

தமிழன் எத்தனைப் புத்திசாலியாக இருந்தாலும் அவனுடய அத்தனைப் புத்திசாலித்தனமும், திரைப்படங்களில் கவர்ச்சி நடிகைகளுடன் கூத்தடித்த தன்னைப் பார்த்தாலே மழுங்கிவிடும் என்பது கூத்தாடி ஜோசப்பின் நம்பிக்கை.

இந்தக் கூத்தாடி மீதான மயக்கத்திலிருந்து எப்போது தமிழன்[குறிப்பாகத் தமிழச்சிகள்] மீண்டெழுவான் என்று ஏங்கிக் கிடப்பதே, சிந்திக்கத் தெரிந்த கொஞ்சம் தமிழர்களின் தலைவிதி!