-இது ஊடகங்களில் வெளியான/வெளியாகிக்கொண்டிருக்கும் ஜக்கியின் விளம்பரம்.
ருத்ராட்சத்தின் பலன்கள்:
*"பயணத்தின்போது பசியெடுத்துச் சாப்பிடவும், தூங்கவும், குடிக்கும் நீர் தூய்மையானதா, நஞ்சு கலந்ததா என்பதை அறியவும் உருத்ராட்சம் பயன்படுகிறது. உணவின் தரத்தையும் இவ்வாறு பரிசோதித்துப் பார்க்கலாம். எந்தவொரு நல்ல பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேலேயும் பிடித்துப் பார்த்தால் அது கடிகார முள் செல்லும் திசையில் சுற்றும். ஒரு கெட்ட பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேல் பிடித்தால் அது எதிர்த் திசையில் சுழலும்.” -ஜக்கி பகவான்.
*"இது தீய சக்திக்கு எதிராகக் கவசமாகச் செயல்படவல்லது[தீய சக்தின்னா, போலிச் சாமியார்களைப் போன்றதா?]. ஒருவருக்குக் கேடு செய்யக்கூடிய தீய சக்திகளைச் சிலர் உபயோகப்படுத்துகிறார்கள். ஒரு ருத்ராட்சம் இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.” -ஜக்கீஸ்வரன்.
*“இரத்தக்கொதிப்பைச் சீராக்கும்; நரம்பு மண்டலத்தில் ஒரு வித அமைதியையும், சுறுசுறுப்பையும் அளிக்கும்[ஆதாரம்?]. 12 வயதுக்குள்ளாக இருக்கும் சிறுவர்கள் ஆறுமுக மணியை அணியலாம். அது அவர்களை அமைதியாக்கி, ஒருமுகப்படுத்தும் தன்மையைக் கொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாகப் பெரியோர்களின் சமநிலையான கவனிப்பை ஈர்ப்பார்கள்.” -ஜக்கிஸ்ரீஸ்ரீ
*“பலமுறை நான் காட்டில் சலனம் இல்லாமல் அமர்ந்திருக்கும் பொழுது, குறிப்பாக மதிய வேளையில் சுமார் 2 லிருந்து 5 மணிக்குள், கண் திறந்து பார்க்கும்பொழுது என்னைச் சுற்றி 5 முதல் 8 நாகங்கள் இருக்கும். நீங்கள் தியானத்தன்மையை அடையும்பொழுது அவை உங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. ஆன்மிகம் என்று கருதப்படும் அதிர்வுகளை[???] நோக்கி இவை போன்ற ஜீவராசிகள் ஈர்க்கப்படுகின்றன.” -பாலயோகி ஜக்கி
*“பல விதமான பூக்களின் மீது ருத்ராக்ஷத்தைப் பிடித்து இதை நிரூபணம் செய்யலாம். ருத்ராட்சம் நேர்மறையாக(பிரதக்ஷணமாக)ச் சுற்றினால் அந்தப் பூ சிவனுக்கு[இந்தப் ‘பூ’ன்னா அவருக்கு உயிர்?!] அர்ப்பணிக்க உகந்தது. தாழம்பூவை வைத்து இது போல செய்தால், ருத்ராக்ஷத்திற்கு அந்தப் பூவைப் பிடிக்கவில்லை என்பதைப் பார்ப்பீர்கள்.
ருத்ராக்ஷத்தை 3 முதல் 6 மாதங்கள் நீங்கள் அணிந்திருந்தால் உங்கள் உடலோடு அது ஒரு வகையில் கலந்துபோயிருக்கும். எனவே, ஒவ்வொருவரின் ருத்ராக்ஷமும் வித்யாசமாக இருக்கும். அதனால்தான் உங்கள் ருத்ராக்ஷத்தை இன்னொருவரிடம் கொடுப்பதோ, மற்றவருடையதை நீங்கள் பெறுவதோ கூடாது. உங்களுக்கு உகந்த அதிர்வை அது பெற்றிருக்கும். உங்களுடைய ஏதோ ஒன்று அதில் இருக்கும்.
ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் நீங்கள் 24 நேரமும் அதை அணிந்திருந்துவிட்டு ஒரு நாள் அதைக் கழற்றிவிட்டுத் தூங்க முயற்சி செய்தால் தூக்கம் வராது. உங்கள் உடலின் ஒரு பாகம் இல்லாமல் இருப்பது போல இருக்கும். ஏனென்றால் ருத்ராட்சம் உங்களின் பாகமாகிவிடுகிறது. அதிகப்படியான ஓர் உறுப்புபோல் செயல் புரிகிறது.” -கர்மயோகி ஜக்கி
***ஜக்கி சொல்லியிருக்கும் அத்தனை உருத்ராட்சத் தத்துவங்களும் உங்களுக்குப் புரியுமானால் அதி அற்புதப் புத்திசாலி நீங்கள். புரியாவிட்டால், அடியேனைப் போல ‘வாழைமட்டை’ ரகம்!
===================================================================
https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ruthratcham-rudraksha-in-tamil