எனது படம்
அறிவியல் தொடர்பான பதிவுகள் எனக்குள்ள ஆர்வம் காரணமாக எழுதப்படுபவை. அவற்றில் சில சிறு பிழைகள் இடம்பெறினும், பல தகவல்கள் நீங்கள் அறியத்தக்கனவாக அமையும் என்பது என் நம்பிக்கை. வருகைக்கு நன்றி.

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

மோடி அரசு எப்போது கவிழும்? கணித்துச் சொல்வாரா பிரபல ஜோதிடர் குஷால் குமார்!

#ந்தியாவின் பிரபல ஜோதிடராக அறியப்படுபவர் ‘குஷால் குமார்’; இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படுபவர். இதற்கு முன் ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரைக் கணித்தவர். இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரையும் முன்கூட்டியே அறிவித்தவர்.

இந்த நிலையில், 3ஆம் உலக போர் தொடக்கம் குறித்தத் தேதியைக் குஷால் அறிவித்துள்ளார். அவருடைய கணிப்பின்படி, இந்தப் போர் இன்று அல்லது நாளை தொடங்கும். ஆகஸ்டு 4 அல்லது ஆகஸ்டு 5 ஆகிய இரு தேதிகளில் போர் தொடங்கும் என அவர் கூறினார்#[தினத்தந்தி].

இந்தப் போர், ஒட்டுமொத்த உலக மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் என்றாலும், போர் நடக்காமல் போகவும் நாட்கணக்கில் தாமதப்படவும் வாய்ப்புள்ளது.

எனவே,

உலகப் போர் குறித்தான மன வேதனையைக் காட்டிலும், மோடி, அமித்ஷா வகையறாக்கள் பழிவாங்குவதால்[காரணம், தேர்தல் தோல்வி], தமிழ்நாடு மக்களும் கேரளச் சகோதரர்களும் அடைந்துள்ள வேதனை அளவிடற்கரியது[‘பாஜக’வைப் புறக்கணித்த மாநிலங்களின் மக்களும் விரைவில் இந்நிலைக்கு ஆளாகக்கூடும்].

எனவே, இவ்விரு மாநில மக்களின் இப்போதைய விருப்பம் இவர்களால் பழிவாங்கப்படுவது தொடரக்கூடாது என்பதுதான்.

அது தொடரக்கூடாது என்றால், மோடியின் அரசு கவிழ்வது, அல்லது கவிழ்க்கப்படுவது உடனடித் தேவை ஆகும்.

‘மோடி ஆட்சி நாளையோ, பிறிதொரு நாளிலோ கவிழ்வது உறுதி’ என்று பிரபல ஜோதிடர் குஷால் குமார் கணித்துச் சொல்லி, அந்தக் கணிப்புப் பலிக்குமேயானால் இம்மாநிலங்களின் மக்கள் அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.
* * * * *