எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 23 மே, 2025

நம் பிரதமருக்குத் தேவை உடனடி மனநல மருத்துவம்!!!

‘இந்தியா-பாகிஸ்தான்’ போர் நிறுத்தத்திற்கான ‘உண்மை’க் காரணம்[‘டிரம்ப்’இன் தலையீடாக இருக்கலாம்] கண்டறியப்படாத நிலையில், அது தன் சாதனையே என்று பறைசாற்ற விரும்பும் மோடி, மனம்போன போக்கில் வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறார்.

உதாரணங்கள்:

“சிந்தூர்[குங்குமம்] வெடிமருந்தாக மாறும்”[மாறாது என்பது படிப்பறிவில்லாத பாமரனுக்குக்கூடத் தெரியும்].

"இப்போது என் நரம்புகளில் சூடான சிந்தூர் ஓடுகிறது"[எப்போதும் ஓடுவது எது மோடிஜி?].

மோடி உடனடியாகப் பதவியிலிருந்து விலகுவது நாட்டுக்கு நல்லது; அவருக்கும் நல்லது. மனநலம் காக்கச் சிகிச்சை பெறுவது அவசியம்.

* * * * *

செய்தி[இந்தியன் எக்ஸ்பிரஸ்]:

#இன்று (மே 22) ராஜஸ்தானின் பிகானேரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு வலுவான செய்தியை வெளியிட்டார். தீவிரவாத உள்கட்டமைப்புகள் மீதான சமீபத்திய இந்தியத் தாக்குதல்கள் மூன்று முக்கிய உண்மைகளை உலகிற்குத் தெளிவாக உணர்த்தியுள்ளன என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி தனது உரையில், "இந்திய முப்படைகளும் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தோம். சிந்தூர்(குங்குமம்) வெடிமருந்தாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை உலகமும், நாட்டின் எதிரிகளும் இப்போது நேரடியாகப் பார்த்துள்ளனர்" என்று குறிப்பிட்டார். மேலும், "இப்போது என் நரம்புகளில் சூடான சிந்தூர் ஓடுகிறது" என்று தெரிவித்தார்#

https://tamil.indianexpress.com/india/pm-narendra-modi-bikaner-visit-operation-sindoor-india-pakistan-9183313