எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 6 ஜூன், 2025

'அந்த 3 பேர்[4?]' பிடிபடவே இல்லை! அப்புறம் எதற்குப் பிரதமரின் வெற்று வாய்ச்சவடால்?!

‘நடுவணரசின் வேலை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பது. மகராஷ்ட்ராவின் விழாக் கொண்டாட்டங்களில் தலையிடுவது அல்ல’ என்று தெரிவித்துள்ளார் ஆதித்யா தாக்கரே> https://www.maalaimalar.com/

இந்தச் செய்தியை வாசித்தபோது.....

பஹல்காமில் அதிரடித் தாக்குதல் நடத்தி 26 அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து[உலகின் எந்தவொரு மூலையில் பதுங்கினாலும் விடமாட்டேன் என்று சபதம் செய்தார் மோடி], கடும் தண்டனை வழங்குவதற்காகத்தானே அண்டைநாட்டு எதிரி பாக்கிஸ்தான் மீது போர் தொடுத்தார் நம் அகிலம் புகழ்[பாக்கிஸ்தானை புறமுதுகிடச் செய்ததில் பெற்றது] நம் பிரதமர்?

‘எதிரியின் படைகளையும் ஆயுதங்களையும் சிதறடித்தேன்; சிதைத்து உருக்குலைத்தேன்: கொலைகாரர்களைக் கொன்றுகுவித்தேன்’என்பது போல் அவர் தினமும் ஆர்ப்பரிப்பது கண்டு, தாக்குதல் நடத்திய குரூர்களைக் சிறை செய்து கடும் தண்டனை வழங்கிவிட்டார் என்று நம்பினோம்.

ஆதித்தியா தாக்கரேவின் மேற்கண்ட ஆவேசப் பேச்சு அந்த நம்பிக்கை தவறானது என்பதை உறுதிப்படுத்திவிட்டது.

எதற்காகப் பாக்கிஸ்தான் மீது ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்னும் பெயரில் பிரதமர்போர் தொடுத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறாத நிலையில், “எதிரி நம்மைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறான்; இனி தாக்குதல் நடத்தாதே என்று கெஞ்சுகிறான்” என்றெல்லாம் நம்மவர் ஓயாமல் முழங்கிக்கொண்டிருக்கிறாரே, எதற்கு?

வேறெதற்கு, அடுத்தடுத்து வரவுள்ள தேர்தல்களைக் குறிவைத்துத்தான்!

தொடர்புடைய காணொலி: