எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 9 அக்டோபர், 2025

நயினார் நாகேந்திரன்... இன்றையப் பொய்யர்; நாளைய நம் முதல்வர்!!!

கரூரில், கூத்தாடி விஜய் அடித்த கொட்டத்தில் உயிரிழந்த 41 பேரும் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், ‘விஜய்’யும் கொல்லப்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் ‘பொய்யர் நயினார்’ நாகேந்திரன் திருவாய் மலர்ந்திருக்கிறார்[காணொலி]. இதன் மூலம் நாம் அறிந்துகொள்வது.....

மேலிடச் சங்கித் தலைவர்கள் மிக விரைவில் ‘தி.மு.க.’ ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டுள்ளார்கள் என்பதுதான்.

அ.தி.முக.வுடன் கூட்டணி சேராவிட்டால் வைப்புத்தொகையைக்கூடத் திரும்பப் பெற்றிட வக்கில்லாத ‘பாஜக’ தலைமை இயன்றவரை தில்லுமுல்லுகள் செய்து, 2026இல் ஆட்சியைக் கைப்பற்றித் தமிழரின் எஞ்சியிருக்கும் கொஞ்சம் உரிமைகளையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளது.

கரூரில் நடந்த கொடூரங்களை இருட்டடிப்புச் செய்து, தி.மு.க.வின் மீது பழி சுமத்தும் பொய்யர் கோமான் நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்!?

புளுகர் நயினார், 13ஆம் தேதி கரூர் செல்லவிருக்கும் விஜய்க்குப் பாதுகாப்பாளராக உடன் செல்வாரா?!