எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

திங்கள், 2 மார்ச், 2026

பெண்களே நல்லவர்கள்!!!

*நினைத்தபோது நினைத்த இடத்தில் நினைத்த வகையிலெல்லாம் காமச் சுகம் அனுபவிக்க இயலாத நிலையில், நம் முன்னோடிகளில் கணிசமானவர்களால் கற்பனை செய்யப்பட்டதே ‘காதல்’ ஆகும். மிக எளிதில் இந்தப் படுகுழியில் வீழ்பவர்கள் ஆண்களே; பெண்கள் அல்லர்.

*உடலுறவில் உச்சம் தொடுவது பெண்ணுக்குச் சாத்தியமா என்பது பற்றி இதுவரை எந்தப் பெண்ணும் கருத்துச் சொன்னதில்லை. வெட்டியாய், “ஆம்” என்றும் “இல்லை”யென்றும் தொடர் விவாதம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் ஆண்களே!
*வாழ்ந்து முடித்து மடிந்துபோவதை ‘ஆடி அடங்கும்  வாழ்க்கையடா’ என்றார்கள் நம் முன்னோர்கள். உடலுறவுக்கு முன்பு நாயாய்ப் பேயாய் ஓடியாடி அலைந்து திரியும் ஆண்கள் உடலுறவுக்குப் பின் அடங்கிவிடுகிறார்கள்; எப்போதும் இயல்பு நிலை மாறாதிருப்பவர்கள் பெண்கள்[பெரும்பாலோர்].

*‘இது’ விசயத்தில் லேகியம், ஆயின்மெண்ட், வயாகரா, நயாகரா என்று பித்துப்பிடித்து அலைபவர்கள் ஆண்களேபெண்கள் அமைதி காப்பவர்கள். 

*ஆசைப்பட்டபடியெல்லாம் அனுபவிக்க இயலாதபோது அதிகம் வருந்துபவர்கள் ஆண்களே. “போதும்” என்று மன நிறைவு பெறுபவர்கள் பெண்கள்[விதிவிலக்கானவர்களும் உளர்]

*ஆண்களைப் பொருத்தவரை இது விசயத்தில் ஆயுள் முழுக்க ஆட்டம் போடுகிறார்கள். பெண்கள்? 

கடவுள் எனப்படுபவர் பெண்களுக்கு மிகப் பெரிய துரோகம் செய்திருக்கிறார்.