திங்கள், 1 ஜூன், 2026

தேர்த்திருவிழா விபத்துகள்... பக்தக்கோடிகளுக்கு நம் பணிவான வேண்டுகோள்!

 மேற்கண்டவாறு, தேர்ச் சக்கரத்தில் சிக்கி எவரொருவரும் பலியாகாமலிருக்க ஆகச் சிறந்த வழி ஒன்று உண்டு.

அது.....

சாமி சிலையை, சக்கரம் அகற்றப்பட்டதும் நெகிழியில்[பிளாஸ்டி] செய்ததும் எடை குறைவானதும் ஆன தேரில் ஏற்றி, ஹெலிகாப்டரில் தொங்கவிட்டு, தெருத் தெருவாய், சற்றே தாழ்வாக வலம்வரச் செய்து, பக்தக்கோடிகள் தரிசனம் செய்து புண்ணியம் சேர்க்கலாம்.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்க, சாமிக்கு அருகிலேயே இருந்து பூஜை செய்யும் அர்ச்சகர் எடை குறைந்தவராக[ஒல்லிப்பிச்சான்] இருப்பது முக்கியம்.

இது அறிவியல் யுகம். பண்டிகைக் காலங்களில் இம்மாதிரி அறிவியல் & தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், எந்தவொரு சாமியும் கோபிக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட சாமியிடமே கோரிக்கை வைக்கலாம்.

எது எப்படியோ, உயிரிழந்த  மாணவர் & படுகாயமடைந்த வாலிபர் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள்.