"தீபத்தூணில் மலர் தூவிப் பூஜை செய்ய அனுமதிப்பீர்களா” -இது உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் என்னும் சங்கி மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட கேள்வி.
கேள்விக்கான பதிலையும் இவரே தருகிறார்: அனுமதித்தால் மாவட்ட ஆட்சியர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டாமாம்; இல்லாவிட்டால் ஆஜராக வேண்டுமாம்[https://www.youtube.com/watch?v=F3r9blMkHrE].
அனுமதிக்காவிட்டால் சட்டப்படி தண்டனை வழங்கு. அதைவிடுத்து எதற்கு இந்த வழவழா தீர்ப்பு?
அது தீபத்தூண்தான் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அப்புறம் எப்படி அதைத் தீபத்தூண்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார் இந்த ஆள்.
அது தீபத்தூணாகவே இருந்தாலும், அதற்கு மலர் தூவி வழிபட வேண்டும் என்று, வழக்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்யும்படி உத்தரவிட சட்டத்தில் இடம் இருக்கிறதா?[தீபம் ஏற்ற வேண்டும் என்ற இவரின் முந்தைய உத்தரவும் தற்சார்பானது] மலர் தூவி வழிபட்டால் ஆஜராக வேண்டாம் என்ற ஒரு சமரச ஏற்பாட்டைச் செய்ய நீதி மன்றம் என்ன இந்த நபரின் பரம்பரைச் சொத்தா?
நீதிமன்றத்தை ஏற்கனவே ஆண்டி மடம் ஆக்கிவிட்ட இந்த ஆள், பக்தியைப் பயன்படுத்தி, 2026 தேர்தலில் ‘திமுக’ ஆட்சியை வீழ்த்தி, சங்கிகளிடம் தமிழ்நாட்டை ஒப்படைக்க அயராது பாடுபடுகிறார்.
மோடி வகையறாவின் அமோக ஆதரவு நீதி மன்றத்திற்கு நெற்றிப்பட்டையோடு வரும் இந்தப் பக்திமானுக்கு உள்ளது.
இந்நிலையில் இந்த ஆளின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து, ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படுவது தமிழர்களின் கடமை ஆகும்.
*****கீழ்க்காணும் காணொலி முகவரியைச் சொடுக்கி இதற்கான கருத்துரைகளை[பின்னூட்டங்கள்] வாசியுங்கள். மகாகனம் நீதிபதி சுவாமிநாதன் வாசித்தால், காரணம் சொல்லாமலே பதவியை ராஜினாமா செய்வார்.

