‘கர்னாடகா கொல்லூரு முகாம்பிகை கோயிலில் விஜய் வழிபாடு’[சன் தொ.கா.>பிற்பகல் 03.35].
அரசுமுறைப் பயணத்தில்[டெல்லியிலிருந்து திரும்பும்போது] செலவில்லாமல் இதைச் செய்திருக்கிறார்.
அரசாங்கப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தும் ஆளும் வர்க்கத்தினர் சிலரில் முதல்வர் ஜோசப்பும் ஒருவர்.
ஏற்கனவே பிற மதம் சார்ந்த பல[!!!] சாமி கோயில்களுக்குப் போய், எம்மதமும் தனக்குச் சம்மதமே என்று பக்திமான்களை நம்பச் செய்த இவர் முகாம்பியைத் தரிசித்ததன் மூலம், அந்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறார்[படம் பிடித்து ஊடகங்களில் வெளியிடுவது 100% சுயநலம்].
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை[பக்திமான்கள்] மக்களின் மனங்களை அத்துபடியாய்ப் படித்த புத்திசாலி முதல்வர் இவர்.
புத்திசாலியோ அதிப் புத்திசாலியோ, தமிழ்நாட்டின் எந்தவொரு முதல்வரும் இவரளவுக்கு மூடநம்பிக்கை[அசாதாரணமான பக்தி] ‘திணிப்பு’க் கைங்கரியத்தைச் செய்ததில்லை.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தமிழர்களின் ‘தலைவிதி’ இந்த ஜோசப் விஜய் கையில்[அப்புறமும்?]!