சனி, 5 செப்டம்பர், 2026

இவர்கள் ‘சாவு’க்கு அஞ்சாதவர்கள்!... சாதனையாளர்கள்!!

*"ஒன்றும் தேங்கிப் போகாது நம் நாட்டு முன்னேற்றம் என்று உங்களை வணக்கத்தோடெல்லாம் கேட்டுக்கொண்டு, இந்த ஏற்பாடு பண்ணி இவ்வளவு நேரம் பொறுமையாய் இருந்ததற்கெல்லாம், என்னைக் காது கொடுத்துக் கேட்டதற்கு என்னுடைய மனப்பூர்த்தியான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டு என் பேச்சை முடித்துக்கொள்கிறேன். வணக்கம்!" 

இந்த உரையை ஆற்றிய பிறகு, உடல்நலக் குறைவால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியார், டிசம்பர் 24, 1973 அன்று தனது 94ஆவது வயதில் காலமானார்[விக்கிப்பீடியா]

*இருபத்தி ஆறாம் வயதில் எழுதத் தொடங்கிய பெ.நா.அப்புஸ்வாமி தொன்னூற்றி ஐந்தாம் வயதில் அதாவது 1986ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் நாள் இறக்கும்வரை எழுதிக்கொண்டு இருந்தார். தான் எழுதிய ஒரு கட்டுரையை ஹிந்துப் பத்திரிகைக்கு அஞ்சலில் சேர்த்துவிட்டு வரும்போதுதான்  இறந்தார்[https://ramachandranwrites.blogspot.com/2019/12/31.html].

*தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பிரபல மருத்துவருமான டாக்டர் எச். வி. ஹண்டே(Dr. H. V. Hande) தற்போது நலமுடன் வாழ்ந்து வருகிறார். 2026ஆம் ஆண்டின்படி அவருக்கு 99 வயது ஆகிறது. சென்னை செனாய் நகரிலுள்ள தனது ஹண்டே மருத்துவமனையில்(Hande Hospital) ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் தொடர்ந்து மருத்துவச் சேவை வழங்கிவருகிறார்[இணையம்].

*இரண்டாம் எலிசபெத் மகாராணி[95 வயது]க்குப் புற்றுநோய் இருப்பதையும், 2021ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தனக்கே உரிய மனவுறுதியுடன், “அடுத்த ஆண்டு பிளாட்டினம் ஜூபிலியைக் கொண்டாட விரும்புகிறேன் அதுவரை நான் உயிருடன் இருக்க உதவ முடியுமா?” என்று மருத்துவர்களிடம் கேட்டார்[https://www.msn.com/en-gb/health/mindandbody/5-things-people-typically-say-when-they-learn-they-re-going-to-die/ss-AA1MqwtR?uxmode=ruby&cvid=6a8aea95d7064c359a28018a7c38390e&ocid=edgdhpruby&pc=NMTS&ei=25#image=1].

*1954இல் வெளியான 'தி பிளாக் நைட்' (The Black Knight) திரைப்படத்தில் ராணி கினிவியராக(Queen Guinevere) நடித்தது உட்படப் பல வேடங்களில் தோன்றிய புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகை ஜீன் லாட்ஜ், தனது 99ஆவது வயதில் புதன்கிழமை(ஆகஸ்ட் 5) காலமானார்.  தனது மறைவுக்கு முந்தைய நாளில்தான் தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்[https://www.msn.com/en-gb/entertainment/news/jean-lodge-dead-hollywood-legend-dies-in-sleep-as-family-pay-heartbroken-tribute/ar-AA29P1Ry?uxmode=ruby&ocid=edgdhpruby&pc=NMTS&cvid=6a7b34dbfbf84c159c1810dfb7915a0c&ei=61].

*டாக்டர் சூரி ஸ்ரீமதி[பெண் மருத்துவர்] ஹைதராபாத்தில் வசிக்கிறார். 92 வயதிலும் அவர் தொடர்ந்து அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

1958இல் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று மருத்துவராகத் தனது பணியைத் தொடங்கிய டாக்டர் சூரி ஸ்ரீமதி, இன்றும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் தினமும் நோயாளிகளைப் பார்த்துக்கொண்டு, அவ்வப்போது சிசேரியன் அறுவைச் சிகிச்சைகளையும் செய்துகொண்டு, ஓர் இளம் மருத்துவரைப் போல மருத்துவச் சேவைகளை வழங்கிவருகிறார்[https://www.bbc.com/tamil/articles/cn5nxx3n9xgo].

**********

***சாவுப் பயத்தை வென்று சாதனை நிகழ்த்தியவர்கள் பலரையும் பட்டியலிட்டால் அது வெகுவாக நீளும் என்பது அறியத்தக்கது.