எந்தவொரு முக்கியத்துவம் வாய்ந்த செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன்பாக, ‘நல்ல நேரம்’ பார்க்கும் அனைத்து அதிபுத்திசாலிகளிடமும் நான் கேட்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி...........
ஒவ்வொரு நாளிலும், நல்ல நேரத்துக்கப்புறம் ‘கெட்ட நேரம்’களும்[எ.டு: ராகு காலம் 10.30 - 12.00; எமகண்டம் 03.00 - 04.30] வருகின்றன.
ஒரு செயலை நல்ல நேரத்தில் தொடங்கிச் செய்துகொண்டிருக்கிற நீங்கள், இடையிடையே குறுக்கிடும் ‘கெட்ட’ நேரங்களில் உங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதில்லையே, ஏனய்யா? ஏன்?!
‘தொடங்குவதற்கு மட்டும் நல்ல நேரம்! அப்புறம் அது தேவையில்லை’..... இப்படிச் சொல்லிவிட்டுப் போனவர்களா, அதை நம்புகிறவர்களா, இவர்களில் ஆகச் சிறந்த முட்டாள்கள் யாரெல்லாம்?
கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கலாமே!
.jpg)