//இந்தியாவில் உள்ள முக்கியக் கோயில்கள் மற்றும் ஆன்மீகத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி, பக்தர்கள் உயிரிழப்பது அடிக்கடி நிகழ்கிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின்(NCRB) தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த இரண்டு தசாப்தங்களில் கூட்ட நெரிசல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் வெங்கடேஸ்வரா கோயிலில்[நவம்பர், 2025] 3,000 பேர் மட்டுமே கொள்ளக்கூடிய இடத்தில் 25,000-க்கும் அதிகமானோர் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் 9 பேர் பலியாயினர்//
இணையத்தில் மேற்கண்ட தகவலைத் தேடிப் பெறுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது கீழ்வரும் சோகச் செய்தி.
//அண்ணாமலையார் கோயிலில்[திருவண்னாமலை] நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற அபிஷேகத்தில், சென்னையைச் சேர்ந்த ரவிசங்கர்(68) என்பவர் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் அவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் மயக்கமடைந்தார். அவரை மீட்டு, கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவச் சிகிச்சை மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர், மேல்சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்//[https://www.hindutamil.in/news/tamilnadu/devotee-dies-after-suffocation-amid-huge-crowd-at-annamalaiyar-temple].
இந்தப் புண்ணிய மண்ணில் உள்ள பிரபலமான கோயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கிப் பக்தர்கள் உயிரிழப்பது என்பது அவ்வப்போதைய நிகழ்வாக உள்ளது.
தீராத துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காகத்தான், கோயில்களில் எழுந்தருளியிருக்கும் சாமிகளை[சிலைகள்> மந்திரம் சொல்லிச் சாமிகளைக் குடியேற்றுவதாகச் சொல்வது ஒரு கூட்டத்தார் காலங்காலமாகச் செய்யும் பித்தலாட்டம்] தேடிச் செல்கிறார்கள் பக்தர்கள். எந்தவொரு சாமியும் கண்டுகொள்வதில்லை.
எந்தெந்தச் சாமி எத்தனை எத்தனைப் பக்தர்களின் துன்பம் களைந்தது என்பதற்கு ஆதாரப் பட்டியல் தந்தவர் எவரும் இல்லை[சாமிகள் தம் பக்தர்களுக்குத் திடீர் மரணங்களை மட்டுமே பரிசாகத் தருகின்றன].
ஆனால், கோயிலுக்குப் போய் மிதமிஞ்சிய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கோ ஒரு நீண்ட பட்டியலே தயாரிக்கலாம்.
கொஞ்சம் சிந்தித்தாலே இந்த உண்மை புரியும்.
சிந்திக்கவிடாமல் தடுப்பவர்கள் ஆன்மிகம் பேசிக் கோடிகளில் புரளும் போலிச் சாமியார்களும், ஆன்மிகச் செய்தி வெளியிட்டு வருமானம் பெருக்கும் ஊடகக்காரர்களும்தான்.
இவர்களால்தான் கூட்டம் கூட்டமாகச் சென்று கோயில்களில் குவியும் புத்தியில்லாத பக்தர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கூட்டம் அதிகரிப்பதற்கு, கோயிலுக்குள் மண்டையைப் போட்டால் நேரடியாகச் சொர்க்கம்[வைகுண்டம் & கைலாசம்] சேரலாம் என்னும் நம்பிக்கையும் காரணமோ?!
2.@perciajames7829
4.@beulamanasae5018
5.@JeyarajY-em8gs 
3 days ago6.@Chennaidonkeymilk
2 days ago