நேபாளப் பேரழிவு | கருத்துரைகள் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேபாளப் பேரழிவு | கருத்துரைகள் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 செப்டம்பர், 2026

நேபாளப் பேரழிவு... பக்தி முற்றினால் பகுத்தறிவு பறிபோகும்!

 

மேற்கண்ட காணொலிச் செய்தி ஒருபுறம் இருக்க, கட்டடம் முற்றிலுமாய் இடிந்து நொறுங்கி விழாமலிருந்ததற்கான[கீழ்த்தளங்கள் சிதைந்துள்ளன] காரணங்களை, கருத்துரை வழங்கியவர்களில் கணிசமானவர்கள் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவற்றுள் கீழ்க்காணும் இரண்டும் இடம்பெற்றுள்ளன.

*அந்தக் கட்டிடத்தின் இரு பக்கங்களிலும் தரைத் தளத்திற்குப் பாதுகாப்பாக இரு கட்டிடங்கள் ஒட்டி இருக்கின்றன. இதுவே அந்தக் கட்டிடம் பாதுகாக்கப்பட்டதற்கான காரணம்.

*அருகில் உள்ள பழைய வீடு ஒன்று இடியாமல் உள்ளதே. அது போலத்தான் இதுவும்.

அறிவுபூர்வமாக இவர்கள் சிந்தித்தது வரவேற்கத்தக்கது.

மதச் சார்புள்ள பக்தர்களும், எதையும் ஆராய்வதற்கான ஆறறிவு தங்களுக்கு வாய்த்திருப்பதை அடியோடு மறந்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவற்றுள் சில:

1.@chandrasekaranr3701,4 days ago

Om Sai Ram Sri Sai Ram Jaya Jaya Sai Ram ji God is Great hats of salute s engineer's
Praise the Lord hallelujah praise God wonderful Amazing this house protection is great God jesus only caring praise God.

3.Mashallah Alhamdulillah Aameen ameen yarabulalamen Allah blessings everything ameen
யார்யார் என்ன பேசிட்டு போங்க அது தேவன் மட்டும் அந்த வீட்டை காப்பாறினார் இதுதான் உண்மை ♥

தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது.

😮 எல்லாம் என்னப்பன் ஈசனே. சிவகாமி அம்மன் அருளால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். எல்லாம் கருணை உள்ள சிவபெருமான் அருள்.

*****கருத்துரை வழங்கியுள்ள மும்மத[முன்னணி பெற்றவை] விசுவாசிகளிடம் நாம் முன்வைக்கும் ஒரே ஒரு கேள்வி: மேலே குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு வீட்டையும் அதிலிருந்தவர்களையும் காத்த உங்களின் கருணைக் கடவுள்கள், வெள்ளத்தில் சிக்கிச் சிதைந்து உருக்குலைந்து மரணத்தைத் தழுவிய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றத் தவறியதோடு, காணாமல்போன நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்களை உயிருடன் மீட்கத் தவறியது ஏனுங்க?