திங்கள், 13 ஜூலை, 2026

விடை கிட்டவே கிட்டாத ஒரே ஒரு குட்டிக் கேள்வி!!!

“கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர்; எதுவாகவும் இருப்பவர்” என்றார்கள்... என்கிறார்கள்.

பாம்பு எலியை விழுங்கி உணவாக்கிக்கொள்ளும் ஓர் இயற்கை நிகழ்வை நாம் அறிவோம். 

கடவுள் எதுவாகவும் இருப்பவர் என்றால், பாம்பாக இருக்கும் அவர் எலியாகவும் இருக்கும் தன்னையே உணவாக்கிக்கொள்கிறாரா?

உயிரினங்கள் ஒன்றையொன்று தாக்கிக் கொல்வதும், கொன்ற ஒன்றை மற்றொன்று உண்டு தின்று உயிர் வாழ்வதும் இயற்கை நிகழ்வாக உள்ளது.

நிகழ்த்துபவர் கடவுள் என்றால்.....

தானே தன்னைத் தாக்கித் துன்புறுத்திக் கொன்று, உணவாக்கி உயிர்வாழும் கிறுக்குத்தனமான வேலையை அவர் செய்துகொண்டிருக்கிறாரா?”

தாக்கப்படுவதால் உண்டாகும் வலியை அவர் மட்டும்தானே உணரவேண்டும். ஏதுமறியாத அப்பிராணிகள் துடியாய்த் துடிப்பது ஏன்?!