தமிழ்நாடு தேர்தலில் விஜய் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 108. எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டு, தனிப்பெரும் கட்சி என்னும் சாதனையை இவர் நிகழ்த்தியிருந்தாலும், ஆட்சியமைக்க மேலும் 11[108 -1 = 107. இவர் வென்ற ஒரு தொகுதியில் ராஜினாமா செய்வதால்] உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆதரிக்க வேண்டிய 11 பேருமே இவரின் கொள்கைகளையும், ஆட்சி அமைத்தால் நடைமுறைப்படுத்துவதாக இவர் அறிவித்தத் திட்டங்களையும் எதிர்த்துப் பரப்புரை செய்தவர்கள்.
சுருங்கச் சொன்னால், அவர்கள் இவரின் நிரந்தர அரசியல் எதிரிகள்.
ஆதரவு தருவதற்கு ஒத்த கருத்துள்ள கட்சிக்காரர்களே பிரதி பலனை எதிர்பார்க்கும் நிலையில், அந்த 11 ஆதரவாளர்களின் ‘எதிர்பார்ப்பு’ மிக மிக அதிகமாகவே இருக்கும். அவற்றை இப்போதைக்கு நிறைவு செய்தாலும்.....
ஆட்சி தொடரும்போதும் அவர்களின் எதிர்பார்ப்பும் ‘தொடர் கதை’யாகத்தான் இருக்கும் என்பதால், ஐந்தாண்டுக் காலமும் அவர்களைத் திருப்திப்படுத்திக்கொண்டே ஆட்சி நடத்துவது அத்தனை எளிதல்ல.
ஆகவே,
‘தவெக’ விஜய் ஆட்சிப்பீடம் ஏறினாலும், அதன் ஆயுட்காலம் நீடிக்க வாய்ப்பில்லை; அது வெகு அற்பம்தான் என்று உறுதிபடச் சொல்லலாம்!
