செவ்வாய், 5 மே, 2026

“விஜய், பக்தி போதும்; பகுத்தறிவாளன் என்பதை உறுதிப்படுத்துங்கள்”!

“நான் மதச் சார்பற்றவன்” என்று அறிவித்து, கோயில் கோயிலாகச் சென்று சாமிகளைத் துதி பாடாமல் இருந்திருந்தால், விஜய் எம்மதத்தவர் என்னும் கேள்வியே எழுந்திக்காது. இன்றளவும் இவரின் மதம் குறித்த தேடல்கள் இணையத்தில் தொடர்ந்து நிகழ்கிறது.

கீழே இடம்பெற்றுள்ள இரு படப் பதிவுகளில், ஒன்றில் இவர் ‘இந்து’ என்றும் மற்றொன்றில் ‘கிறித்தவர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.


இவர் கிறித்தவர்தான் என்று திட்டவட்டமாக மக்கள் முடிவெடுத்துத் தன்னைப் புறக்கணித்துவிடக் கூடாது என்று நினைத்தோ என்னவோ, இந்து, இஸ்லாம் கோயில்களுக்கெல்லாம் சென்று, அனைத்து மதச் சாமிகளையும் வழிபடுகிறவன் என்று தன்னை அடையாளப்படுத்தினார்; படுத்துவார்.

இனியேனும், கோயில்களுக்குச் சென்று வழிபடும்போதெல்லாம், அதைப் படம் எடுத்து ஊடகங்களில் காட்சிப்படுத்தாமலிருப்பது வரவேற்கத்தக்கது[தனிப்பட்ட முறையில் நாட்டிலுள்ள அத்தனைக் கோயில்களுக்கும் இவர் போகலாம். தடுப்பாரில்லை].

காட்சிப்படுத்தினால்.....

இவரைப் போலவே இவரின் பக்தர்களும் பக்திப் பித்தர்களாகி, சுயமாகச் சிந்திக்கும் திறனை முற்றிலுமாய் இழப்பார்கள்.

மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள விஜய் தன்னை அதி தீவிரப் பக்தனாக அல்லாமல்,  ஆழ்ந்து சிந்திக்கும் பகுத்தறிவாளனாக காட்சிப்படுத்துவது இந்த நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையும்.