சனி, 13 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம்... இன்று ‘ஒரு நாள்’ உண்ணாவிரதம்! அடுத்து? அடுத்து? அடுத்து?

//திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்களில் ஒரு தரப்பினர்[50 பேர்] சார்பாக உண்ணாவிரதம்//*[செய்தி] 

உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றமே அனுமதி அளித்திருக்கிறது; ஆதரவாகவும் இருக்கிறது.

த.நா.அரசு அனுமதிக்காவிட்டால், அடுத்தடுத்தடுத்து, ஐயாயிரம் பேர், ஐம்பதாயிரம் பேர், ஐந்து லட்சம் பேர் என்று பெரும் எண்ணிக்கையிலான பக்தக்கோடிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள். பயந்தும் பணிந்தும் தர்க்காவுக்கு அருகே உள்ள தூணில்[தீபத் தூணோ அல்லவோ] தீபம் ஏற்ற அரசு அனுமதிக்கும்.

அடுத்து.....

தீபத் தூணுக்கு அருகே உயரமான இடத்தில் இஸ்லாமியர்களின் தர்கா இருக்கக் கூடாது. அதை அகற்ற வேண்டும் என்று, இந்தியா எங்கும் உள்ள பக்திமான்கள் திரண்டுவந்து, நீதிமன்ற அனுமதியுடன் ‘சாகும்வரை’ உண்ணாவிரதம் இருப்பார்கள்.

தர்கா அகற்றப்பட்டு அங்கு ராமச்சந்திர மூர்த்திக்கு மாளிகை எழுப்பப்படும்; திருப்பரங்குன்றத்திற்குப் பாலராமர் குன்றம் என்று புதிய நாமகரணம் சூட்டப்படும்[இதற்கும் உண்ணாவிரதம் இருப்பார்கள்].

அடுத்து.....

அவ்வப்போது இந்த நாட்டில் ஏற்படும் மதக் கலவரங்களுக்குக் காரணமாக இருக்கும் இஸ்லாமியரின் தர்காக்களோ மசூதிகளோ[+கிறித்தவர்களின் தேவாலயங்கள்?] இருத்தல் கூடாது என்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும். விளைவு.....

அனைத்துப் பிற மதத்தவர் வழிபாட்டுத் தலங்களும் அகற்றப்பட்டு, முழுக்க முழுக்க ஒரு ‘இந்து’ நாடாக இந்தியா காட்சியளிக்கும்; ஜொலிக்கும்.

அடுத்து.....

வேறென்ன, இந்தப் புண்ணிய ராமஜென்மப் பூமி மதக் கலவரங்களே இல்லாத அமைதிப் பூங்காவாகத் திகழும். கலவரங்களுக்கே இடம் தராமல் இந்து மக்கள்[அனைத்து இனத்தவரும் இந்துக்களாக மாறியிருப்பார்கள், அல்லது மாற்றப்பட்டிருப்பார்கள்] ஒற்றுமையுடன் சுபிட்சமாக வாழ்வார்கள்.
போற்றி போற்றி ராமச்சந்திர மூர்த்தி போற்றி!

வாழ்க... வளர்க... ராமஜென்மப் பூமி[‘இந்தியா’]! வெல்க ராமப்பிரானின் பக்தர்கள்!!
                                           
                                       *   *   *   *   *

வெள்ளி, 12 டிசம்பர், 2025

வீழ்கிறதா தமிழினம்? ஆளவிருக்கிறார்களா ஆதிக்க வெறியர்கள், அடிமைகளின் ஆதரவுடன்?!

//டிச13இல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு சங்கிகள் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் கோரும் இடத்திற்குப் பதிலாக மாற்று இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்; உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.//

திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்து உயர் நீதிமன்றத்தில்[மதுரைக் கிளை] விசாரணை நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன[விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது].

விசாரணை முற்றுப்பெற்றுத் தீர்ப்பு வெளியாகாத நிலையில், மேற்கண்ட செய்தி[டிசம்பர் 13இல் உண்ணாவிரதம்> மனு> அனுமதி] வெளியாகியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு எல்லாம் பொதுமக்களுக்கு[சங்கிகள் & நீதிபதிகள் விதிவிலக்கு] மட்டும்தானா என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அதற்கான பதில் என்னவாக இருந்தபோதிலும், சங்கித் தலைவர்களின் சூழ்ச்சி இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது.

அது.....

கார்த்திகைத் தீபத்தின் பெயரால், தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ‘திமுக.’ ஆட்சியைக் கலைத்து, மீண்டும் ஆட்சிக்குவராமல் தடுத்து, தமிழினத்தை அடிமைப்படுத்துவதுதான், இங்குள்ள அடிமைகளின் ஆதரவோடு.

அத்தனை அதிகாரங்களும் ‘அவர்கள்’ கையில் இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

* * * * *

https://www.hindutamil.in/news/tamilnadu/fast-unto-death-on-december-13th-demanding-the-lighting-of-the-lamp-at-the-lamp-post-in-thiruparankundram-high-court-grants-permission