ஒரு பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சி, அங்கே துக்கிளியூண்டு கீத்துக்கொட்டகை போட்டு, அதில் ஒரு சாமி சிலையை வெச்சி, கையில் ஒரு வெங்கல மணியும் தீபாராதனைத் தட்டுமா தொழிலை ஆரம்பிக்கீறாங்க வேலைவெட்டி இல்லாதவனுக.
ஆரம்பத்தில் எட்ட நின்னு வேடிக்கை பார்த்துட்டுப் போற பொதுமக்கள் ‘எதுக்கும் கும்பிட்டு வைப்போம்’னு கும்பிட ஆரம்பிக்கிறாங்க.
கையில் காசு உள்ளவன் நின்னு கும்பிட்டு உண்டியலில் பணம் போட்டுட்டுப் போனா, அதைப் பார்த்துட்டு மத்தவனும் போடுறான்.
“இந்தச் சாமியை வேண்டிகிட்டா இருக்கிற தோசம் எல்லாம் கழிஞ்சிடுது; நினைக்கிற காரியம் கைகூடுது”ன்னு நாலு முட்டாளுங்க சொல்லிவைக்க, சாரி சாரியா மக்கள் வந்து கும்பிட ஆரம்பிச்சுடுறாங்க.
சின்னஞ்சிறு உண்டியல் மாயமாகிப் பெரியதொரு ராட்சத உண்டியல் அந்த இடத்தை ஆக்கிறமிக்குது.
கீத்துக் கொட்டகை இருந்த இடத்தில் பிரமாண்ட அடுக்குமாடிக் கோயில்! அக்கம்பக்கத்தில் இருக்கிற பயன்பாட்டில் இல்லாத அரசாங்க நிலமும் கோயிலுக்குச் சேர்க்கப்படுது[அரசாங்கம் கண்டுகொள்வதில்லை> சாமி கண்ணைக் குத்திடும்!].
நாட்கள் செல்லச் செல்ல கோயில் சொத்து கோடிக்கணக்கில் பெருகுது. கோயிலுக்கு என்பதைவிட, கோயிலை உருவாக்கிய சாமியாருக்கு என்று சொல்வதே பொருத்தமா இருக்கும்.
நம் நாட்டில் சாமியார்கள் பலர் கோடி கோடி கோடீஸ்வரச் ‘சாமிகள்’ ஆன கதை இதுதான்.

