அடங்காத ஆசை காரணமாகத் தவறு செய்ய முற்படும்போது, அதன் விளைவுகள் குறித்து நம் மனசாட்சி எச்சரிக்கை செய்யும்.
பல நேரங்களில் அது பயனற்றுப்போனாலும், அரிதாகச் சில நேரங்களிலேனும், தவற்றுக்கான தண்டனையை நாம் அனுபவிக்க நேரலாம். அந்தத் தண்டனை எதிர்பார்த்ததைவிடவும் பல மடங்கு கடுமையானதாகவும் இருக்கக்கூடும்.
எனவே, எந்த ஒன்றின் மீது ஆசைப்படும்போதும் மனசாட்சி குரல் கொடுத்தால் அதை மதித்துச் செயல்படுவது நல்லது.