பெரியார் | ஜோசப் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் | ஜோசப் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2026

பெரியாரை அறியாத தற்குறி முதலமைச்சர் ஜோசப்!!!

திராவிட அரசியலின் தந்தை என்று போற்றப்படும் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பரந்த சமூகக் கொள்கைகளைத் தனது கட்சி ஏற்றுக்கொண்டாலும், நாத்திகம் மற்றும் மத நம்பிக்கையை நிராகரிப்பது குறித்த அவரது கருத்துக்களை ஏற்கவில்லை என்று தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் திங்கள்கிழமை சட்டமன்றத்தில் தெரிவித்தார்[TVK embraces Periyar's social ideals, not his atheism: Vijay in Assembly]. 

‘தமிழர் தந்தை’ என்று போற்றப்படும் பெரியாரின் சமூகக் கொள்கைகள் அனைத்துமே கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்துதான் பிறந்தன.

ஜாதியின் பெயரால் மனிதனை மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக் கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது; கோயிலுக்குள் நுழையக் கூடாது என்னும் இவையெல்லாம் ஆரிய வர்ணாசிரம மனுதர்மக் கோட்பாட்டின்படி கடவுளின் பெயரால் கற்பிக்கப்பட்டன… படுகின்றன. 

பிறப்பால் மனிதனின் ஏற்றத்தாழ்வு, ஜாதியப் படிநிலை, ஒடுக்கு முறைக் கட்டமைப்பு,  ஆரியச் சித்தாந்தம், வர்ணாசிரமம், மனுதர்மக் கோட்பாடு ஆகியவை கடவுளின் பெயரால் பாதுகாக்கப்பட்டன… படுகின்றன.

இக்காரணங்களால்தான் கடவுள் நம்பிக்கையைச் சாடினார் பெரியார்; வழிபாட்டைக் கண்டித்தார்[“ஜாதி என்ற கடும் விஷம் கொண்ட நாகப்பாம்பைக் கொல்வதற்காக அடித்தபோது, அது ஓடிப்போய் கோயிலின் கருவறைக்குள் நுழைந்து கொண்டது” என்றார்].

பெரியார் குறித்த உலகறிந்த இந்த உண்மைகளை அறியாமல், சட்டமன்றத்தில் உளறியிருக்கிறார் முதல்வர் ஜோசப்.

‘பெரியார்’ என்னும் சொல்லை இவர் உச்சரிப்பதுகூட அவரை அவமதிக்கும் செயலாகும்.