ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

நம்புங்கள்... நம் மூளையின் வயது ‘என்றும் பதினாறு’!!!

//‘வயது ஆக ஆக[வாலிபம் > நடுத்தர வயது > முதுமை] நம் உடம்பு பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. மூளையில் உள்ள அணுக்கள் அழிவது தொடர்கிறது. புது அணுக்கள் உருவாவது குறைகிறது’//

என்றிப்படியான வருத்தம் தரும் செய்தியைத்தான் நாம் அறிந்துவைத்துள்ளோம்.

இதற்கு எதிர்மறையானதும் நம்மை வியப்பிலும் உவப்பிலும் ஆழ்த்தக்கூடியதுமான ஆய்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன.

நாம் சிந்திக்கும் அறிவைப் பெறுவது மூளையில் உள்ள அணுக்களால்தான்.

மூளையிலுள்ள அணுக்கள் அழிய அழிய, சிந்திக்கும் ஆற்றல் குறைவதோடு நினைவாற்றலும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது என்றுதான் அண்மைக் காலம்வரை சொல்லிக்கொண்டிருந்தார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால், 2012ஆம் ஆண்டு எடின்பர்க் பல்கலைக்கழகம்[https://www.ed.ac.uk/clinical-brain-sciences] மனித மூளை குறித்து ஓர் ஆய்வு நிகழ்த்தியது. அதன் மூலம் கண்டறியப்பட்ட, மூளை அணுக்கள் குறித்த தகவல்கள்:

பொதுவாக, நாம் சிந்திப்பதற்கு மூலாதாரமாக இருக்கும் அணுக்களில் கால் பங்கு மட்டுமே மரபியல்[heredity] மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஏனையவை[நான்கில் மூன்று பங்கு] வாழ்க்கை முறைகளின் மூலம்[உணவு, உடற்பயிற்சி, மனப்பயிற்சி]பயிற்சி தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதன் மூலம் மேம்படுத்தப்படுகின்றன.

இதனால், இளமைக் காலத்தில் மூளையில் இடம்பெற்றிருந்த அணுக்களின் எண்ணிக்கை சற்றேனும் குறையாமல் முதுமைப் பருவத்திலும் சிறப்பாகச் செயல்படுகின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் என்கிறார்கள். அவருக்கு இப்போது 86 வயது. அவருடன் பணிபுரிபவர்களை ஈர்க்கக்கூடியவராகவு, ஈர்க்கக்கூடிய மற்றும் தெளிவான சிந்தனையுள்ள நபராகவும் காணப்படுகிறார் என்கிறார்கள். வரவிருக்கும் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளார். வெற்றி பெற்றால, அடுத்த பதவிக்காலம் முடியும்போது அவரின் வயது 90 ஆக இருக்கும்.


எனவே, உடல் நலத்தையும் மன நலத்தையும் முறையாகப் பேணினால், நம் மூளைக்குள் உட்பொதிக்கப்பட்ட அறிவும் திறனும் குறையாமல் இருந்துகொண்டே இருக்கும்.


ஆக, விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு முடிவுகள், தன்னம்பிக்கையுடனும், வயதைப் பொருட்படுத்தாமலும், அறிவாற்றலுடனும் வாழ்ந்துமுடிப்பதற்குப் பெரிதும் உதவுகின்றன எனலாம்.

சனி, 10 பிப்ரவரி, 2024

'அது’க்கான லேகியம் விற்பார்களா ஆர்.பி.உதயகுமாரும் அண்ணாமலையும்!?

'அவர்கள்’, ‘இந்தி’ வெறியன்களுக்குச் சேவகம் செய்த[4 ஆண்டுகள்] பழைய கொத்தடிமைகள். ‘இவர்’ கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட வெறியன்களின் பாதம் வருடிப் பணிவிடை செய்த/செய்யும் புதிய கொத்தடிமை.

ஆக, இரு தர்ப்பாருமே கொத்தடிமைகள்தான் என்பதில் கிஞ்சித்தும் கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை.

இங்கே ‘அவர்கள்’ என்பது எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கும் சுயநலக் கும்பல்[ஆர்.பி. உதயகுமார் உட்பட].

‘இவர்’ என்பது ஓயாமல் ஒழியாமல் மோடி புகழ் பாடுவதற்கென்றே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அண்ணாமலை.

ப.அடிமைகளுக்கும் பு.அடிமைக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்வது யாவரும் அறிந்ததே.

ஓரிரு நாட்களுக்கு முன்பும் அது நிகழ்ந்திருக்கிறது.

அண்ணாமலையை ‘லேகியம்’ விற்பவர் என்று ஆர்.பி.உதயகுமார் உளறிவைக்க, “ஆமாம், நான் லேகியம் விற்பவன்தான். இங்குள்ள பீடைகளை[ஆர்.பி.உ. கூட்டம்] ஒழிப்பதற்காக இதைச் செய்கிறேன்” என்று பதிலடி கொடுத்துக் கொந்தளித்திருக்கிறார் அண்ணாமலை.

இவர்கள் இருவருமே பிரபல அரசியல்வாதிகள்.

மக்களின் நலனுக்காகச் சிந்திப்பதையும், நல்ல பல ஆலோசனைகளை ஆட்சியாளர்களுக்கு வழங்குவதையும் கடமையாகக் கொண்டவர்கள்.

தங்களுக்கான கடமைகளை அறவே மறந்து, லேகியம் விற்பது குறித்துப் பேசுவதில் நேரத்தை விரயமாக்கும் இவர்கள் அரசியல்வாதிகள்தானா என்னும் கேள்வி எழுகிறது.

கேள்விக்கான பதில்.....

“இல்லை” என்பதே.

அரசியலிலிருந்து உடனடியாக இவர்கள் விலகுதல் வரவேற்கத்தக்கது; தமிழ்நாட்டுக்கு நல்லது.

விலகிய பின்.....

இருவருமே ‘அது’[அது எது என்பது கொஞ்சம் சிந்தித்தாலே புரியும்!]க்கான ‘லேகியம்’ விற்கலாம்.  

இதைச் செய்தால், பொழுது போகும்[தேவைக்கு மேல் சம்பாதித்தவர்கள் என்பதால் வேறு தொழில் தேவையில்லை]; நல்ல வருமானமும் கிடைக்கும்