வியாழன், 4 ஜூலை, 2024

மணவிலக்குப் பெற்றவளின் மானசீகக் கணவன்!!![கால் நிமிடக் காணொலி]

கீழ்க்காணும் குறுங்காணொலியில் இடம்பெற்றிருப்பது கற்பனை நிகழ்வுதான்.

கணவனுடனான அந்தரங்க உறவுப் பிரச்சினைகள் காரணமாக மணவிலக்குப் பெறுகிறாள் ஒரு பெண்[பெரும்பாலான மணவிலக்குகளில், மனதுக்குள் புதைத்து வைக்கப்படும் முக்கியக் காரணம் இதுதான்].

தாலி கட்டியவன் இல்லாத நிலையில், இச்சையைக் கட்டுப்படுத்தி நெறி பிறழாமல் வாழ்வது அத்தனை எளிதல்ல எனினும், பெண்களில்[அரிதாகச் சில ஆண்கள்] அப்படி வாழ்கிறவர்களும் உள்ளனர் என்பது மறுக்க இயலாத உண்மை.

அவ்வப்போது அதிரடியாய்த் தாக்கும் அந்தப் பொல்லாத உணர்ச்சியைக் கட்டுப்படுத்த, அவரவர் வாழும் சூழலுக்கும் மனப் பக்குவத்திற்கும் ஏற்ப உரிய வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

அவற்றில், கீழ்க்காணும் காணொலிப் பெண் கையாளும் வழி[விவாகரத்துக்குப் பிறகு தன் மனதுக்குகந்த ஒருவனைக் கணவனாக வரித்தல்] வித்தியாசமானது; விவேகமானதும்கூட!


                              *   *   *   *   *

*** அந்த 41 பேருக்கு[‘யூடியூப்’ பார்வையாளர்கள். ஹி... ஹி... ஹி!!!] நன்றி! உங்களுக்கும்தான்!!

புதன், 3 ஜூலை, 2024

போலிச் சாமியார்கள்! ஆண்டவனின் திருவடி தொழுது நாம் வேண்டுவது.....

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்ச்சியின்போது, 122 பேர் பலியானதற்கு, அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியது மட்டுமே காரணம் என்று ஊடகங்கள் வாயிலாக முன்பு அறியப்பட்ட செய்தி தவறானது.

போலி ஆன்மிகம் பேசியே பிரபலம் ஆன இந்த அயோக்கியன் ‘போலோ பாபா’, காரில் ஏறி அங்கிருந்து வெளியேறியபோது.....

‘இவனின் காலடி மண்ணையும், கார் சென்ற பாதையின் மண்ணையும் தொட்டு முகத்தில் ஒற்றிக்கொள்ள, பக்தர்கள்[3 லட்சம் பேர்] முண்டியடித்ததால்தான் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்’ என்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அண்மைச் செய்தி.

கண்டதைத் தின்று, நாறும் மலம் கழித்து வாழும் இந்தக் கழிசடைகளின் கால் பட்ட மண்ணைத் தொட்டுப் புண்ணியம் சேர்க்கலாம் என்று இவர்களை நம்பவைத்தவர்கள் நச்சு மனம் படைத்த இவனும் இவனைப் போன்ற சாமியார்களும்தான்.

போலோ பாபா எங்கோ ஓடி ஒளிந்துகொண்டுள்ளான்.

மோடி என்ன செய்யப்போகிறார்?

இவன் எங்கு ஓடி ஒளிந்திருந்தாலும் தேடிக் கண்டுபிடித்துத் தண்டிப்பாரா?

அல்லது,

நாளை, கடவுளால் அனுப்பப்பட்ட தன்னுடைய காலடி மண்ணைத் தொடவும் பக்தர்கள் முண்டியடித்து மோதி விழுந்து செத்துத் தொலைத்தால், தன்னைத்தானே தண்டித்துக்கொள்ள இயலாது என்பதால், ’போலோ பாபா’ என்னும் இழிகுணச் சாமியாரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா?

என்ன செய்யவிருக்கிறார் மோடி என்பதை அவரைப் பூவுலகுக்கு அனுப்பி வைத்த அந்த ஆண்டவனே அறிவான்!

அப்படி ஒருவன் இருந்தால், அவனின் அடிபணிந்து நாம் வேண்டிக்கொள்வது.....

“ஒரே ஒரு முறை உலகத்தோர் காணும் வகையில் காட்சி தந்து ஒரு பேட்டி அளித்தருள்வாய் பகவானே. நீ இதைச் செய்தால், ‘நான் கடவுளின் அவதாரம்; நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்’ என்று பொய்யுரைத்து மக்களை மடையர்கள் ஆக்கும் போலி ஆன்மிகர்களின் கொட்டம் முற்றிலுமாய் அடங்கும்” என்பதுதான்!