செவ்வாய், 25 நவம்பர், 2025

ராமர் ‘கைவசம்’ இருக்க 2047வரை காத்திருப்பது தேவையா மோடி?!

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசினாராம். என்னவெல்லாம் பேசினார்[+ நம் விமர்சனம்]?*

மோடி: “அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழாவை முன்னிட்டு ஒட்டு மொத்தத் தேசமும், உலகமும் ராமரின் பக்தியிலும், உணர்விலும் மூழ்கி உள்ளன.....”

நாம்: உலக மக்கள் தொகையில், பெரும்பான்மையினர் பக்தி இல்லாதவர்களாகவும், ராமன் அல்லாத சாமி பக்தர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை இந்த ராமனடிமைக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கய்யா.

மோடி: “அயோத்தியில் இன்று காவிக் கொடி ஏற்றியது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இது கொடி அல்ல, இந்தியாவின் கலாச்சார அடையாளம்.”

நாம்: ராம பக்தர்கள் என்னும் ஒரு மிகச் சிறுபான்மைக் கும்பலில் கலாச்சார அடையாளமே தவிர, பல்வேறு இனத்தவரையும் மதத்தவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் கலாச்சார அடையாளம் அல்ல இது. இந்த உண்மையைக்கூட அறியாத தற்குறிதான் இந்த இந்தியாவின் பிரதமர்.

மோடி: “வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர் கொடி காட்டுகிறது......”

நாம்: பொய்களை மட்டுமே பரப்பி ஒரு நபர்[மோடி] அப்பாவி முட்டாள்களை ஏமாற்றி, தொடர்ந்து இந்த நாட்டை ஆள முடியும் என்பதைக் காட்டுகிறது இக்கொடி.

மோடி: “கடந்த 11 ஆண்டுகளில், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிச் சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடை ந்துள்ளனர்.”


நாம்: ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடைந்த லட்சணத்தைக் கீழே இடம்பெற்றுள்ள ஆதாரபூர்வமானதொரு பட்டியல் மூலம் அறியலாம்***


மோடி: “நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047ஆம் ஆண்டுக்குள், அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம்.”


நாம்: எப்போதும் இவர்[மோடி] ‘கைவசம்’ ராமச்சந்திர மூர்த்தி இருக்கையில், இன்னும் 20 ஆண்டுகளுக்கும் மேலான அவகாசம் தேவையே இல்லை[இவருக்கு வாக்களிக்கும் களிமண்டையர்கள் மூளையில் இதெல்லாம் உறைக்குமா?].


*https://www.dinamalar.com/news/india-tamil-news/pm-modi-ayodhya-visit-this-flag-represents-the-resurgence-of-indian-civilisation-says-pm-modi/4091708


***நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள முன்னணி மாநிலங்கள்:

பீகார்[முதலிடம்]. அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட்[2ஆம் இடம்]: 35 விழுக்காடு.

மேகாலயா[3ஆம் இடம்]: 32.4 சதவீதம்.

உத்தரப்பிரதேசம்[4ஆம் இடம்]: 26.3 விழுக்காடு.

மத்திய பிரதேசம்[5ஆம் இடம்]: 25.3 விழுக்காடு.

https://www.puthiyathalaimurai.com/india/poverty-line-in-india

திங்கள், 24 நவம்பர், 2025

“இந்துக்கள் இல்லையென்றால் உலகம் அழியும்”... ஞானி மோகன் பகவத்!!!

மனித நாகரிகம் என்பது மாற்றங்களுக்கு உள்ளாவது.

பழைய நாகரிகங்கள், காலவெள்ளத்தில் மாறுதல்களுக்கு உள்ளாகிப் புதிய நாகரிகங்களாக உருவாவது இயற்கை.

மனிதர்கள் ஓர் இனத்தை[மனித இனம்]ச் சார்ந்தவர்கள் ஆயினும், அவர்கள் வாழும் நாட்டுச் சூழ்நிலைக்கேற்பவும், மனநிலைக்கேற்பவும் அவர்களின் நாகரிகமும் மாறுபடும்; அழிதலும் நிகழும்.

மாறுதலுக்கு உள்ளாகாத, அல்லது அழியாத மனித நாகரிகம் என்று எதுவும் இல்லை. இந்தியா என்னும் நிலப்பகுதியில்[ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே இந்தியா என்றொரு நாடு உருவானது. ‘பாரதம்’ என்னும் பெயரில் ஒரு நாடு இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை] நிலவிய வேறு வேறு நாகரிகங்களும் இதற்கு விதிவிலக்கானவை அல்ல.

வேறு வேறு நாகரிகங்களை உள்ளடக்கிய இந்திய மண்ணில், ‘இந்துச் சமூகம்’ என்ற ஒன்று என்றும் இருந்ததில்லை; இன்றும் இல்லை. பல்வேறு இனங்கள் மட்டுமே உள்ளன.

இஸ்லாம், கிறித்துவம் போன்ற மதச் சார்புடையவர்களை ஒதுக்கி, எஞ்சியுள்ளவர்களை[பல இனத்தவர்] ‘இந்துக்கள்’ ஆக்கியவர்கள் இந்து ஆதிக்க வெறியர்கள்.

வரலாறு இதுவாக இருக்க.....

“மணிப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முக்காலமும் அறிந்த ஞானி மோகன் பாகவத், “..... யுனான்(கிரீஸ்), மிஸ்ர்(எகிப்து), ரோம் என அனைத்து நாகரீகங்களும் பூமியில் இருந்து அழிந்துவிட்டன. நமது நாகரீகத்தில் ஏதோ[?] உள்ளது, அதனால்தான் நாம் இன்னமும் இங்கே இருக்கிறோம்” என்று அருளுரை ஆற்றியிருக்கிறார்.

ஏதோ ஒன்று இருக்கிறதாம். அந்த ஏதோ ஒன்று எது? அது இந்துமத வெறி.

மேலும், “பாரதம் என்பது அழியாத நாகரீகத்தின் பெயர். நமது சமூகத்தில் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். அதனால் இந்துச் சமூகம் எப்போதும் இருக்கும். இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும். உலகை நிலை நிறுத்துவதற்கு இந்துச் சமூகம் மையமானது” என்றும் கதையளந்திருக்கிறார்.

உலகின் தோற்றம் குறித்த உண்மை அறியப்படாதது போலவே, இதன் அழிவு எப்போது நிகழும் என்பதும், அது எவ்வகையானதாக இருக்கும் என்பதும் எவருக்கும்[விஞ்ஞானிகள் உட்பட] தெரியாது. அழிவு நிகழுமாயின், இந்துச் சமூகமோ விந்துச் சமூகமோ வேறு எந்தச் சமூகமோ எதனாலும் உலகை நிலைநிறுத்த இயலாது.

‘ஆர் எஸ் எஸ்’ என்னும் கும்பலின் ஆதிக்கம் நீடித்தால், உலகம் அழிகிறதோ அல்லவோ, இந்து மதம் அழியும் என்று வேண்டுமானால் உறுதிபடச் சொல்லலாம்.

https://www.hindutamil.in/news/india/without-hindus-world-will-not-exist-rss-chief-mohan-bhagwats-bold-claim