செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

‘போலி ஞானி[ஜக்கி]’யைப் ‘போட்டுப் பொளந்த’ இசைஞானி!!!

//இளையராஜா தீவிரமான ஆன்மீகவாதி ஆவார். அவரது ஸ்டூடியோவில் ரமண மகரிஷி புகைப்படம் எல்லாம் அலங்கரிக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்.

சினிமாவுக்கு இசையமைத்தது மட்டுமின்றி ஆன்மீகம் தொடர்பாகவும் ஏகப்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அவர். 


இந்நிலையில் ராஜா பேசியிருக்கும் காணொலி[வீடியோ] ஒன்று சமூக வலைதளங்களில்[சோஷியல் மீடியா] பெருமளவில் பகிரப்பட்டுள்ளது.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா,  "எல்லோருக்கும் பேதம் இல்லாத அன்பைக் காட்டுபவன்தான் சத்குரு. ‘சத்குரு’னு சொல்லிக்கொள்பவன் எல்லாம் சத்குரு கிடையாது; சத்தியமாக ஆக முடியாது" என்றார். 

அவர் அப்படி சொன்னபோது அந்த அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. இந்தக் காணொலியை[வீடியோ] ரசித்த ரசிகர்களோ, 'ஈஷா யோகா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவனை இசைஞானி போட்டுப் பொளந்துவிட்டார்' என்று அவரைப் பாராட்டுகிறார்கள்//[ஊடகச் செய்தி].

இசைஞானியை நாமும் பாராட்டுகிறோம்.


https://tamil.filmibeat.com/throw-back-stories/ilaiyaraaja-s-sadhguru-remark-goes-viral-music-maestro-s-spiritual-speech-sparks-debate-172249.html


திங்கள், 23 பிப்ரவரி, 2026

‘சூட்[கின்னஸ்] சாதனையாளர் மோடியின் அடுத்த சாதனை ‘சுற்றுலா நாயகன்’?!

https://www.youtube.com/watch?v=pSOmCyVPjz0] இதைச் சொடுக்கினால் ஒரு காணொலி[20 ஆகஸ்ட் 2016] தென்படும்.

//அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புது தில்லிக்கு வருகை தந்தபோது, நம் பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த சர்ச்சைக்குரியதும் விலையுயர்ந்ததுமான சூட், பின்னர் ரூ.43,131,311 கோடிக்கு ஏலம் விடப்பட்டு, மிகவும் விலையுயர்ந்த சூட் என்று, கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது. இந்தச் சூட்டை சூரத் வைர வியாபாரியும், தனியார் விமான நிறுவன உரிமையாளருமான லால்ஜிபாய் படேல் வாங்கினார்// என்பது இதன் உள்ளடக்கம்.

மேற்கண்ட சாதனையின் மூலம் ‘கின்னஸ்’ஸில் இடம்பிடித்த நம் பிரதமர் விரைவில், உலகம் சுற்றுவதிலும் மாபெரும் சாதனை புரிவார். மீண்டும் அதில்]கின்னஸ்] அவர் பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்பது நம் நம்பிக்கை.

தொடர்ந்து ‘கின்னஸ்’ஸில் இடம்பெறுவதன் மூலம், ‘கின்னஸ் நாயகன்’ என்னும் பட்டத்தையும் நம்மவர் பெற்றிட நெஞ்சார வாழ்த்துகிறோம்!