ஞாயிறு, 24 ஜனவரி, 2021

'கோமா'வில் கடவுள்!!!

உலகப் புகழ் பெற்ற அந்தக் கோடி கோடி கோடீஸ்வரக் கடவுளின் கோயிலுக்குத் தன் மனைவி தேவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார் செல்வநாயகம்.

அவர்களின் முகங்களில் கனமான சோகத்தின் ஆழமான கீறல்கள்.

அவர்களின்  ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒரே வாரிசு ஆறு வயது அமுதன். அவன் மாடிப்படிகளில் உருண்டு மண்டையில் அடிபட்டுக் கோமாவில் விழ, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிறுவனின் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், மனித முயற்சியில் நம்பிக்கை இழந்துவந்த செல்வநாயகம் தம்பதியருக்குக் கடவுளின் நினைப்பு வந்தது.

அவர்கள் அறிந்த கடவுளரின் திருநாமங்களை நாள்தோறும் உச்சரித்தார்கள்; கோயில் கோயிலாகச் சென்று வழிபட்டார்கள். பலனில்லை.

மனத்தளவில் கடவுளைத் துதித்தால் போதாது என்று செல்வநாயகத்தின் உள்ளுணர்வு எச்சரித்தது. 

ஒரு ஜோதிடரின் ஆலோசனைப்படி, அந்தக் குபேரக் கடவுளைத் தரிசித்து, உண்டியலில் சில லகரங்களைக் காணிக்கையாக்கித் திரும்புவதென முடிவெடுத்தார்.

மனைவியுடன் பயணத்தைத் தொடங்கினார்.

கோயிலை அடைய அரைக் கிலோமீட்டர் இருக்கையில், காரை வழிமறிப்பது போல, கையில் குழந்தையுடன், ஏழ்மைக் கோலத்தில் ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள்.

காரின் கண்ணாடியைத் திறந்தார் செல்வநாயகம்.

அவர்கள் அவரை நெருங்கி,  கைகளை நீட்டியவாறு ஏதோ சொல்ல முற்படுவதற்குள், “ரெண்டு பேரும் நல்லாத்தானே இருக்கீங்க. உழைச்சிப் பிழைக்கலாமே. பிச்சை எடுக்க வெட்கமாயில்லை?” என்று சீற்றம் மிகுந்த குரலில் கேட்டார்.

அந்த இருவரில், குழந்தையை ஏந்தியிருந்த பெண் பேசினாள்: “சாமி, நாங்க உழைச்சிப் பிழைக்கிறவங்கதான். பிச்சை எடுக்கிற ஜாதியில்ல. இப்பத்தான் முதல் தடவையா பிச்சை கேட்கிறோம்” என்றாள்.

அவளைப் புரியாமல் பார்த்தார் செல்வநாயகம். “நீ என்னம்மா சொல்றே?’

“நாங்க எங்க வயித்துப் பாட்டுக்காகப் பிச்சை எடுக்கல, ஐயா.”

“வேறெதுக்குப் பிச்சை எடுக்குறீங்க? மத்த பிச்சைக் காரங்களுக்குப் பிச்சை போடவா?”-விவரிப்புக்கு அடங்காத கொடிய துன்பத்தால் மனம் துவண்டு கிடந்த நிலையிலும் நக்கலான வார்த்தைகளால் அவர்களைச் சீண்டினார்.

“சாகக் கிடக்கிற எங்க குழந்தைக்கு வைத்தியம் பார்க்கணும். கையில் காசில்ல. உதவறதுக்கு யாரும் இல்ல. எங்க சொந்த பந்தங்க எல்லாமே எங்களை மாதிரி தினக் கூலிங்க ஐயா.”

“குழந்தைக்கு என்ன தொந்தரவு?”

“இருதயத்தில் ஓட்டை இருக்கு. ஆப்ரேசன் பண்ணலேன்னா சீக்கிரம் செத்துடுவான்னு டாக்டர் சொன்னாருங்க.”

“இன்னும் ஆப்ரேசன் பண்ணலையா?”

“நெறையச் செலவாகுமாம். அன்னாடுங்காச்சி நாங்க. எங்ககிட்ட அவ்வளவு பணம் ஏதுங்க?”

“தர்ம ஆஸ்பத்திரிக்குப் போகலாமே?”

“போனோம். இது மாதிரி ஆப்ரேசன் நிறைய இருக்காம். ஆறுமாசம் கழிச்சி வரச் சொல்லிட்டாங்க. அதுவரைக்கும் எங்க புள்ள உசுரு தங்காது எசமா.”

யோசனையில் ஆழ்ந்திருந்தார் செல்வநாயகம்.

அந்த ஏழைத் தாய் தொடர்ந்தாள்: “கடவுள்தான் எங்க புள்ளையைக் காப்பாத்தணும்னு கோயில் கோயிலா போயிக் கும்பிட்டுத் தவம் கிடந்தோம். மத்த மதச் சாமிங்களையும் மனசில் நினைச்சிக் கண்ணீர் விட்டு அழுதோம். எந்தச் சாமியும் கண் திறக்கல. உழைச்சிப் பிழைக்கிற நாங்க யாருக்கும் கெடுதல் செஞ்சதில்ல. கடவுள் எங்களை ஏன் சோதிக்கிறார்னு தெரியல.....”

அவள் தேம்பி அழ ஆரம்பித்ததால் அவளுக்கு நா குழறியது.

“அழாம சொல்லு” என்றார் செல்வநாயகம்.

“எங்க செல்லம் அணுஅணுவா சாகிறதைக் கண்ணால பார்க்க முடியல ஐயா. பிச்சை எடுத்தாவது பிள்ளையைக் காப்பாத்தணும்னு நினைச்சித்தான் முதல் தடவையா உங்ககிட்ட கை ஏந்தினோம். நீங்க நல்லா இருக்கணும். அம்பதோ நூறோ நீங்க இஷ்டப்பட்டதைக் குடுத்து உதவுங்க சாமி.”

சற்றே தயக்கத்துடன் கேட்டார் செல்வநாயகம்: “உங்களை நம்பலாமா?”

குழந்தையின் அப்பன் தன் வசமிருந்த ஒரு பையிலிருந்து, மருத்துவமனை தந்த மருத்துவ அறிக்கையைப் பணிவுடன் நீட்டினான்.

அதை ஆராய்ந்த செல்வநாயகத்தின் முகத்தில் திருப்தி பரவியது.

“காரில் உட்காருங்க. உங்க குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துடறேன். ஆகிற செலவை நான் ஏத்துக்கிறேன்” என்றார்.

தயங்கிய அந்தப் பரம ஏழைத் தம்பதியை வற்புறுத்திக் காரில் ஏற்றி கொண்டார்.

ஓட்டுனரிடம் காரைத் திருப்பச் சொன்னார்.

“ஏங்க, கோயிலுக்கு.....” -சொல்ல நினைத்ததைச் சொல்லி முடிக்காமல் நிறுத்தினார் அவர் மனைவி தேவி.

“இந்தப் பரம ஏழைகளுக்கு உதவாத கடவுள் நமக்கு நிச்சயம் உதவப்போறதில்ல. நம்ம பையனைப் போலவே அவரும் கோமாவில் இருக்கார் போல.” -வறட்சியானதொரு  புன்னகையை  நழுவவிட்டுக் கண்மூடி யோசனையில் ஆழ்ந்தார் செல்வநாயகம்.
********************************************************************************************
2014ஆம் ஆண்டுப் படைப்பு

சனி, 23 ஜனவரி, 2021

வீரமணியா[தி.க.தலைவர்] 'விவேக' மணியா?!?!

இன்று, தற்செயலாக,  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 'விடுதலை'[https://www.facebook.com/viduthalaidaily/நாளிதழை வாசிக்க நேர்ந்தது.

இதழில் இடம்பெற்றுள்ள பதிவுகளுக்கான கருத்துரைகளை வாசித்தபோது, பெரும் எண்ணிக்கையிலான கருத்துரைகள் என்னைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.

ஒரு பதிவில் இடம்பெறும் கருத்துகளுக்கு எதிராக மாறுபட்ட கருத்துரைகள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கதே. ஆனால், அக்கருத்துரைகளில் அநாகரிகமானதும் ஆபாசமானதுமான சொற்களோ வாசகங்களோ இடம்பெறுதல் கூடாது என்பது பதிவர் அனைவருக்கும் ஏற்புடையதாகும்.

விடுதலையில், மேற்குறிப்பிட்ட வகையிலான கருத்துரைகள்[அநாகரிகம், ஆபாசம்] பெரும் எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன[வீரமணி அவர்கள் இவற்றிற்கு மறுப்புரை வழங்கவோ, இவற்றை மட்டுறுத்தல் செய்யவோ இல்லை என்பது பெரும் வியப்புக்குரியதாகும்]. எடுத்துக்காட்டாகக் கணிசமான கருத்துரைகளை[பிழைதிருத்தம் செய்யாமல்] இங்கு தொகுத்திருக்கிறேன். 

*Vivek Ssr

பொறுக்கி போட்டாலே உன் அமைப்புல 50 ஆயிரம் பேர் கூட இருக்க மாட்டானுக இதுல அமெரிக்கா வரைக்கும் அறிக்கையா 🤣🤣🤣 இது எல்லாம் உனக்கே ஓவரா தெரியவில்லையா ஓசிசோறு

*சூனா பானா

Congress aatchi la daily namma meenava sahothirarkalai kollum pothu yaarodatha koombikittu iruntha

*முருகன் வேல்

ஏண்டா ஓசி சோறு வீரமணி, அப்புறம் எதுக்கு மேன் அண்ணாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அதற்கு குண்டு முழங்க புதைக்கும் இறுதி ஊர்வலம். கருணாநிதிக்கு? தினமும் தயிர் வடை வேற சமாதி மேல வச்சிடடு போக அவரும் வந்து சாப்பிடுகிற உண்மை சம்பவம் நடக்குது அந்த சமாதியில். அதுசரி ஏமாந்தவன் பொண்டாட்டி தாலி அறுத்து வாழும் உனக்கு திமுக குடும்பத்து பகுத்தறிவுக் காட்சிகளில் தலை இட்டால் உன் சோரியான் சொத்துக்கள் உன் குடும்பத்தை விட்டு கைமாறி போய் விடும் என்ற உன்னுடைய அந்த பயம் எனக்கு பிடித்து இருக்கிறது

*முண்ட கலப்பை

அவுசாரி வீட்டுல கழகத்தை தொடங்குன நாயெல்லாம்

கற்பை பற்றி பேசுது..!… மேலும் காட்டு

*Seshadri Ramesh

என்ன பயன்.. புண்ணாக்கு பயலே

*Sakthivel Gounder

தெலுங்கு கட்டுமரத்து சூழ்ச்சியில் வளர்ந்த திம்மவாலனுலு..

#திருமாவளவன் என்ற பெயரில் நடமாடிக்கொண்டு இருக்கும் தமிழின விரோதியின் உண்மையான பெயர் #திம்மவாலனு

#அவனே சூட்டிக்கொண்டது தான் *திருமாவளவன்*

#உண்மையான சாதி தெலுங்க #சக்கிலி.!

அவனே சூட்டிக்கொண்டது #பரையர்

இந்த திம்மவாலனு வின் அப்பா பெயர் #இராமசாமி

உலகிலேயே அப்பனுக்கு பெயர் வைத்தவன் இவனாகத்தான் இருக்க முடியும், அப்படி #தொல்காப்பியன் என்று அப்பனுக்கு பெயர் சூட்டி தமிழனாக்கிய மகனும் இந்த திம்மவாலனுவே தான்.!

#இவனது அம்மா பெயர் சின்னத்தாயி இல்லை #சவுடம்மா...

#இவைத்து அக்கா பெயர் கூட திலகவதி இல்லை #நார்த்தம்மா என்கிற பிற்கால திரேஸ்ராணி

திம்மவாலனுவின் உண்மையான மதம் பௌத்தம் அல்ல #கிறித்துவம்.!

*Govind Raj

மூடிட்டு போங்கடா

*Ayyanar Pandian

தமிழர் திருநாள் தெரியும் அது என்னடா தேவிடியா திருநாள் ஸாரி திராவிடியா திருநாள்

*Vijay Vijay Viran

தமிழர் திருநாளை இந்த ஈனபயல்கள் திரவிட திருநாள் என்கிறானுங்கதமிழனை தமிழை தமிழன் பன்பாடு கலாச்சாரம் வழிபாடை அழிக்கவந்தவனே திரவிடன் என்னும் எச்சி பயல்கள்

*Karthik IN

மதவெறிய தூண்டிவிடுறதே நீ தான் ஆனா கொஞ்சம் கூட வெக்கமில்லாம இப்படி பேசுற பாரு ..அறிவாலயத்துக்கு பின்னடி பொறங்கைய நக்கி திங்குறதுக்கு நீ என்னவேணாலும் செய்வ.. ஆனா நீ வெக்கப்படமாட்ட.

*Muhilan Chandru

ஜெயலலிதாவை சட்டசபையிலே சேலையை ஊருவின கோஷ்டி தானே நீங்க

*Muhilan Chandru .அதைவிட எம்.ஜி.ஆர் படங்களில் பாரு நீச்சல் உடையில் வருவார் உங்க அம்மா.அவளே சேலையை கிழித்து நாடகம் போட்ட சினிமாக்காரி. வந்துட்டான் வரலாறு சொல்ல.

*Muhilan Chandru ஜெயலலிதா கற்பின் அரசிதானே

*Sami Nathan

ஏண்டா முட்டா கூதி உ.பி யில் எங்கு கற்பழிப்பு நடந்தாலும் மோடி, யோகி , BJP ன் கிளப்பி விடுற நாய. இந்தியாவில் உ.பி தாண்டா பெரிய மாநிலம் 26 கோடி மக்கள் தொகை, 70 க்கும் மேல் MP உள்ள பெரிய மாநிலம். பல சாதி, பல மதம், பல கலாச்சாரம் உள்ள மாநிலம்.. கடல் என்ற இயற… மேலும் காட்டு

*முருகன் வேல்

மஞ்சள் துண்டு போட்டு கடவுள் பக்தியோடு கடைசி காலத்தை கழித்த அந்த கருணாநிதியா? தயிர் வடை கூட வச்சி அவர் சமாதியில் படையல் போட்டார்களே அவரா? பெரிய புழுத்தி மாதிரி பேசின அந்த சொரிமுத்து மூட சமாதி மேலே குடிக்கும் பாலை ஊற்றி பகுத்தறிவுக்கு எதிராக செய்த அந்த ச… மேலும் காட்டு

*முருகன் வேல்

ஆமாம் தினமும் சுயமரியாதை உடன் கருணாநிதி எப்படி திருட்டு ரெயில் ஏறி கக்கூஸ் இல் ஒளிந்து சென்னை வந்தார், சுய மரியாதையுடன் எப்படி ஊரை கொள்ளை அடித்து ஆசியாவில் தனது குடும்பத்தை பெரும் பணக்காரர்களாக ஆக்கினார், எப்படி வீரமணி சுயமரியாதை ஆக ஓசி சோறு என்று பெயர… மேலும் காட்டு

*Kesavan Durai

மோடி கும்பல் திருட்டு கும்பல் அய்யோக்கிய கும்பல் பிராடு பயல்கள் அவர்களிடம் பேச என்ன இருக்கு

*Rajesh Kumar Shathriyan

உங்களுக்கு எவ்வளவு கேட்டாலும் ஆசை தீராத தேவ்டியா பசங்களா

===============================================================

*மேற்கண்ட கருத்துரைகள் பற்றி, பண்பாடு பிறழாமல் 'கருத்துரை' வழங்குவது என் விருப்பமாக இருந்தது. எத்தனை யோசித்தும் அது சாத்தியப்படவே இல்லை.