வியாழன், 1 மே, 2025

‘பாக் - இந்தியா’ போர்... நம் ‘யூடியூபர்’களின் அதிரடித் தாக்குதல்கள்!!


மேற்கண்ட ‘யூடியூப்’ காணொலியின் தலைப்பு[ஒரு பகுதி] ‘சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட பாகிஸ்தான்’ என்பதாகும்.

இதைப்[‘பஹல்காம்’ தாக்குல் தொடர்பானவை]போன்ற இன்னும் கூடுதல் காணொலித் தலைப்புகள்:

*‘கெடு ஓவர். பதற்றத்தில் பரிதவிக்கும் பாகிஸ்தான்!’

*‘வெறிகொண்டு இறங்கும் இந்தியா. அலறும் பாகிஸ்தான் அதிகாரிகள்’

*‘நடு நடுங்கும் பாகிஸ்தான் அமைச்சர்’ 

*‘பாகிஸ்தான் இனி செல்லாக்காசு’

*‘முடிந்தது பாகிஸ்தான் கதை’

*‘பாகிஸ்தான் மீது இடியை இறக்கிய ஹாட்லைன் மெசேஜ்’

*‘பாகிஸ்தானை நசுக்க 5 நிமிசம் போதும்’

*'வறண்டுபோன செனாப் நதி. கதறும் பாகிஸ்தான்’

*'எல்லையில் இறங்கிய ஜாமர்கள்: நிலைகுலையும் பாக்' 

*'இந்திய தாக்குதல் நடக்கும் நேரத்தில் பாக். தளபதி தொலைந்தார்!' 

*'வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது’

*'“மண்ணோடு[பாகிஸ்தானை] மண்ணாக்குவேன்” -மோடி’

*‘எங்கு திரும்பினாலும் செக் சுருண்டு திணறும் பாகிஸ்தான்’

*'இறங்கி அடிக்கத் துவங்கிய மோடி! அரண்டுபோன பாகிஸ்தான்!'

இது சற்று முன்னர்[01.05.2025] பதிவு செய்த காணொலி. தலைப்பு.....

“இனி இந்தியாகிட்ட வச்சுக்காத” & ‘முடிந்தது பாகிஸ்தான் கதை’]

இப்படியாக, நம் ‘யூடியூப்பர்’கள் நம் பரம்பரைப் பகைவன் பாகிஸ்தானியன் மீது சொல்லாயுதங்களால் நடத்திய தாக்குதல்கள் அபாரம்; அட்டகாசம். அணு ஆயுதப் போர் இல்லாமலே அவன் சரணடைவது உறுதி... உறுதி... உறுதி!

தொடருங்கள் யூடியூபர்களே.

வெற்றி நமதே!

புதன், 30 ஏப்ரல், 2025

பயமுறுத்தும் பக்திமான் மோடியும் ‘பக்கா’ பகுத்தறிவாளன் ‘டிரம்ப்’பும்!!!

‘NEWS தமிழ்’ தொலைக்காட்சியில் காலை 09.45 மணிக்கு வெளியான ஒரு செய்தி என்னைப் பிரமிக்கச் செய்தது.

“நான் அடுத்த ‘போப்’ ஆக விரும்புகிறேன்” -முகத்தில் வசீகரப் புன்னகை தவழ இதைச் சொன்னவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்[ஜனாதிபதி] ‘டொனால்டு டிரம்ப்’ ஆவார்.

தான் மதச்சார்பற்ற ஒரு பெரிய நாட்டின் பிரதமர் என்பதை மறந்து, கோயில்களைக் காணும்போதெல்லாம் நீட்டிப் படுத்துக் கும்பிடு போடும் மோடியுடன்[வழிபடுவது அவரின் உரிமை. ஆனால், படம் பிடித்து ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரம் தேடுவது ஏற்கத்தக்கதல்ல] ஒப்பிட்டபோது.....

உலக அளவில் முன்னணி பெற்றிருப்பதும், அமெரிக்காவில் அதிக அளவில் பின்பற்றப்படுவதுமான கிறித்தவ மதத் தலைவர் ‘போப்’ பதவியை டிரம்ப் கிண்டலடித்தது அடியேனைப் பெரிதும் வியக்கச் செய்தது.

மூடநம்பிக்கைகளின் விளைநிலங்களான[மதங்களால் விளைந்த நன்மைகளைவிடவும், உண்டாகும் தீமைகள் மிக மிக ஆதிகம்] மதங்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் அளவிறந்த மோகம் டிரம்ப் போன்றவர்களின் செயல்பாடுகளால் படிப்படியாக குறையும் என்று நம்பலாம்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு என் மன நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

காணொலி: