ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

கூத்தாடிகளைக் கொண்டாடும் தமிழனே உலகின் ‘நம்பர் 1’ முட்டாள்!!!

சில நாட்கள் முன்புவரை, உலகிலேயே தமிழன்தான் அதி புத்திசாலி என்னும் நம்பிக்கையில்[“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பாரதி சொன்னதை நினைவுகூர்க] இறுமாப்புடன் ஏறு போல் பீடு நடை போட்டுப் பிற இனத்தவரைப் பொறாமையில் புழுங்கச் செய்துகொண்டிருந்தோம்.

இன்றோ, உலகிலேயே 'நம்பர் 1’ முட்டாள் தமிழன்தான் என்று நிரூபணம் ஆகிவிட்ட நிலையில்[நடிகன் விஜய் நிகழ்வில் பலர் உயிரிழப்பு & படுகாயம்], தலை குனிந்து தள்ளாடி நடந்துகொண்டிருக்கிறோம்.

{பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு. அரசியல் பலத்தைக் காட்ட கூத்தாடி 4 மணி[10?] நேரம் தாமதமாக வந்திருக்கிறான்> ஆதாரம்: ‘தினத்தந்தி’[செய்தி> பகல் 12.30 மணி}
கவர்ச்சி நடிகைகளுடன் கட்டிப்புரண்டு குத்தாட்டம் போடும் ஒரு நடிகனைக் காண்பதற்காக, பல்லாயிரக் கணக்கில் ஒன்றுகூடி, பல மணி நேரங்கள் காத்திருந்து, அவன் வரும்போது முட்டிமோதிக்கொண்டு மூச்சுத் திணறி உயிரழந்தவர்களைத் தமிழினத்தவர் என்பது வெட்கக்கேடு.

நடிகன்கள் பல மணி நேரம் தாமதமாக வருவதே இம்மாதிரியான அவலங்கள் நிகழ வேண்டும் என்பதற்காகத்தான்.

மக்களிடம் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பிறர் அறியச் செய்வதற்காக அவன்கள் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.

இது புரியாத செம்மறி ஆடுகளாகத் தமிழர்கள் ஆகிப்போனது தமிழின வரலாற்றில் இடம்பெறாத பேரிழிவு ஆகும்.

இனியேனும் தமிழன் திருந்துவானா? எப்போது?

திருத்துவார் யார்?!

சனி, 27 செப்டம்பர், 2025

திருப்பதி ஏழுமலையான் சாமியும் விஜய் என்னும் தெய்வத் திருமகனும்

கடவுளைத் தரிசிக்கத்தான் நம் மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் ஓர் உதாரணம்.

இன்றளவில், விஜய் என்னும் நடிகனைரைத் தரிசிக்க, வீதிகளிலும் வீட்டு மாடிகளிலும் கால்கடுக்க நின்றுகொண்டும், உயிரையும் துச்சமாக எண்ணித் தெருவோர மரக் கிளைகளில்  தொற்றிக்கொண்டும்,  கடவுளைத் தரிசிக்கக் காத்திருப்பதைவிடவும் அதிக நேரம் நம் மக்கள் காத்திருப்பது நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது[கடந்தக் காலங்களில் நம்மை ஆண்ட புரட்ட்ட்ட்சித் தலைவருக்கும் புரட்ட்ட்ட்சித் தலைவிக்கும்கூட இந்த அளவுக்குக் கூட்டம் கூடியதில்லை].

ஆக, கடவுள்களைவிடவும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் விஜய் என்பது சந்தேகமறப் புரிகிறது.

2026இல் விஜய் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராவதும், மக்கள் அவரைப் ‘தெய்வத் திருமகன்’[தெய்வத் தாய்’ என்றாற்போல] என்றழைத்துப்[காணொலிக்காரன், ‘விஜய் அரசியல் பிரமோற்சவம்’ என்று தலைப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது] புளகாங்கிதப்படுவதும்  உறுதி.

வாழ்க ஆளப் பிறந்த தமிழர் தலைவன் விஜய்! வளம்பெறுக தமிழ் மக்கள் அவர் ஆட்சியில்!!