திங்கள், 27 அக்டோபர், 2025

‘மோடி’யே இந்தப் பிரபஞ்சத்தின் குரு! பிரார்த்தித்துப் பயன் பெறுங்கள்!!

‘விஸ்வகுரு’ என்னும் சொல்லுக்கு.....

விஸ்வகுரு[சமஸ்கிருதம் विश्व गुरु] என்பது இரண்டு சொற்களைக் கொண்டுள்ளது: /விஸ்வ>[எல்லை கண்டறியாத அளவுக்கு விரிந்து பரந்து கிடத்தல்] 'பிரபஞ்சம்'> ); குரு> 'ஆசிரியர்'/ என்று விளக்கமளிக்கிறது விக்கிப்பீடியா[https://en.wikipedia.org/wiki/Vishvaguru].

அதாவது, பிரபஞ்சத்திலுள்ள ஒட்டுமொத்த உயிர்களுக்கு, குறிப்பாக, ஆறறிவு மனிதர்களுக்குக் குருவாக இருப்பவர்தான் ‘விஸ்வகுரு’ ஆவார்.

அந்தவொரு குருதான் நம் மோடிஜி. சொல்பவர்[“மோடியே என் விஸ்வகுரு”* ஏ.சி.சண்முகம் என்னும் பிரபலக் கல்வி நிறுவன முதலாளி.

இவர் ஆகச் சிறந்த அறிவாளியும்கூட என்பதால். இவர் சொல்வதை முழுமையாக நம்புவதோடு, பிரபஞ்சக் குருவான நரேந்திர மோடி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுங்கள்[வாய்ப்பை நழுவவிடாதீர்].

தரிசிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை எனின், அவ்வப்போது மானசீகமாக அவரை வழிபட்டுப் பயனடையுங்கள்.

‘ஏ.சி.ச.’வுக்கு நம் நன்றி.

*https://www.hindutamil.in/news/tamilnadu/1380973-ac-shanmugan-interview.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCb3pQLMJCpqgMwwrHZBA&utm_content=rundown

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

சடலத்தை எரித்தால் சாம்பல்! புதைத்தால் புழு!! சடங்குகள் ஒரு கேடா?!

அரசன் என்ன ஆண்டி என்ன, செத்த பிறகு புழுத்து நாறும் ஊத்தை உடம்புதான் மனிதராகப் பிறந்த எல்லோருக்கும்.

விரைவில் அதை எரித்துச் சாம்பலாக்குவதோ, குழி தோண்டிப் புதைப்பதோ புத்திசாலித்தனம்.

ஆனால், சடலத்திலிருந்து ஆவியோ ஆன்மாவோ வெளியேறுவதாக நம்பிச் சடங்குகள் செய்யும் வழக்கம் எல்லா மதத்தவரிடமும் உண்டு.

அவரவர் வாழ்க்கை வசதிகளுக்கேற்ப இந்த மூடப்பழக்கத்தின் எண்ணிக்கை கூடும், அல்லது குறையும். 

இங்கிலாந்து நாட்டு மன்னர் பரம்பரையினர் நோய்வாய்ப்பட்டுச் சாவைத் தழுவுவது உறுதியானால், அவர்களுக்குச் செய்யும் சடங்குகள் குறித்து அவர்களிடமே அங்கீகாரம் பெறுவது இன்றளவும் நீடிக்கும் விசித்திரமான மூடப்பழக்கம்.

அதை உறுதி செய்கிறது, மரணத்தைத் தழுவவுள்ள மூன்றாம் சார்லஸ் குறித்த செய்தி*

//புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் 77 வயதாகும் மூன்றாம் சார்லஸ் மன்னர்[இங்கிலாந்து], தன்னுடைய இறுதிச் சடங்கிற்கான[செத்த பிறகு] திட்டத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே அங்கீகரித்துள்ளார்.

இறுதிச் சடங்குகள் சுமார் 10 அல்லது 11 நாட்கள் நீடிக்கும். குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்து அவரது உடலைப் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ரகசியமாக[?]க் கொண்டுசெல்வார்கள்[இவை குறிப்பிடத்தக்கவை. கூடுதல் சடங்குகள் குறித்து அறியக் கீழுள்ள முகவரி*க்குச் செல்க]//. 

“இருக்கும்வரைதான் ஏற்றத்தாழ்வுகள்! செத்தொழிந்த பிறகு அரசனென்ன ஆண்டியென்ன?” என்று கேட்கத்தோன்றுகிறது.

                                    *   *   *   *   *

*https://www.msn.com/en-in/health/health-news/the-funeral-is-already-planned-king-charles-is-ready-for-death/ar-AA1P9WW4?ocid=winp2fptaskbar&cvid=0eaae0277b3347d0d9be5d1e6d913d5b&ei=41 -

[Story by Kathrine Frich
 • 1d • 
3 min read]