சனி, 21 பிப்ரவரி, 2026

கருந்துளையில் ‘துளை’[துவாரம்]யா? உண்மையா?!

“ஒரு பெரிய நட்சத்திரம் தன் வாழ்நாளின் இறுதியில் எரிபொருளை இழந்து, சிதைந்து(Collapse), அடர்த்தியான புள்ளியாக மாறும்போது கருந்துளை'(Black Hole) உருவாகிறது” என்கிறார்கள் விஞ்ஞானிகள்..... சரி.

“இதன் ஈர்ப்பு விசை எவ்வளவு வலிமையானது என்றால், இதற்கு மிக அருகில் செல்லும் நட்சத்திரங்கள், கோள்கள், ஏன் ஒளிகூட உள்ளே இழுக்கப்படும்; மீண்டும் வெளியே வர இயலாது” என்று மிரட்டுகிறார்கள் அவர்கள்..... சரிங்க.


“அடிவானம்தான் கருந்துளையைச் சுற்றியுள்ள எல்லை. இந்த எல்லைக்கு அப்பால் சென்றால், எதுவும் திரும்பி வர இயலாது” என்றும் உறுதிபடச் சொல்கிறார்கள்..... ஏற்போம்.

இவர்கள் கருந்துளை... கருந்துளை என்கிறார்களே, இந்தக் ‘கருந்துளை’க்குள் பிரமாண்டமான ‘துளை’[துவாரம்/Hole] இருக்கும்தானே? -இது அறிவியலின் அரிச்சுவடிகூட அறியாத என் நீண்ட நாள் கேள்வி.

சற்று முன்னரான இணையத் தேடலில் கிடைத்தது பதில். அது.....


கருந்துளை, வாயுக்கள் மற்றும் தூசுகளால் ஆன ஒரு சுழலும் வட்டு(Accretion Disk)தானே தவிர, கருந்துளைகளில் உண்மையில் "துளைகள்" இல்லை.


கருந்துளை(Black Hole) என்ற பெயர் 1960-களில் இயற்பியலாளர் ஜான் வீலரால் பிரபலப்படுத்தப்பட்டது. ஒளியைக்கூட வெளியேற விடாத, மிக அதிக ஈர்ப்பு விசை கொண்ட இருண்ட பகுதி என்பதாலும், விண்வெளியில் ஒரு 'கருமையான ஓட்டை'(Black Hole) போலத் தோன்றுவதாலும் இந்தப் பெயர் உருவானது[BBC +4]

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

இஸ்லாமியருக்கு இரக்கக் குணம் இல்லையா? ‘அல்லா’வின் மனம் கல்லா?!

[அறிவிப்பு: இது ‘பார்வை’ எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பதிவு அல்ல; உள்மனப் பரிதவிப்பின் வெளிப்பாடு] 

சற்று முன்னர், தற்செயலாக ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் புதிய ஆணை தொடர்பான ஒரு காணொலி தென்பட்டது{தலிபான்கள் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, தங்கள் நாட்டுப் பெண்களுக்கு[இஸ்லாம்] இழைக்கும் கொடுமைகள் குறித்தக் காணொலிகள் இணையத்தில் அணிவகுத்து நிற்பது பலரும் அறிந்ததே}.

ஒட்டுமொத்த மனித இனத்தையும் நடு நடுங்கச் செய்கிற, பெண்கள் மீதான தாக்குதல் நிகழ்வுகள் அதில் இடம்பெற்றுள்ளன.

பெண்டாட்டிகளை[+பெண் பிள்ளைகள்?] எலும்பு முறியாமல் தாக்கித் தண்டிக்க[எலும்புகள் முறியாமலே தாக்கிக் கொல்லலாம்], புதியதொரு சட்டத்தை இயற்றியிருக்கிறார்களாம் தலிபான்கள்[புதிய கட்டமைப்பின் கீழ், கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு த'சீர் என்ற கருத்தின் கீழ் "விருப்பப்படி தண்டனை" வழங்க வெளிப்படையாக அனுமதிக்கப்படுகிறார்கள்].

அதன் விளைவு, அங்கே பெண்களை ஆண்கள் கொடூரமாகத் தண்டிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன{அவை காணொலிகளாகவும் வெளியிடப்படுகின்றன.

இஸ்லாமியரோ அல்லாதவரோ, அவற்றைக் காணுவோர்  மனம் பதறும்; கண்கள் கலங்கும் என்பது உறுதி.

தலிபான்கள் அல்லா மீது அதி தீவிரப் பற்றுள்ளவர்கள்.

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இரக்கக் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. இந்தத் தலிபான்களோ அரக்கக் குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

கல்வி கற்றல், வேலைக்குச் செல்லுதல் போன்ற பெண்களுக்கான அத்தனை உரிமைகளையும் பறித்ததோடு, வீட்டில் அடைத்துவைத்து அவர்களை அடிமைகளாக நடத்துகிறார்கள்.

உலகின் ஒட்டுமொத்த இஸ்லாமியரும் இதை வேடிக்கை பார்ப்பது உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது.

உலகின் பெரும்பான்மை இஸ்லாமியர்கள், இந்தச் சிறுபான்மைத் தலிபான்களைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் தயங்குவது புரியாத புதிராக உள்ளது. பிற நாடுகளிலுள்ள இஸ்லாம் பெண்களும் ஆப்கானிஸ்தான் பெண்களைப் போலவே, 100% அடிமைகளாக நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ!

உலக அளவிலான இஸ்லாமியருக்குத்தான் இரக்கக் குணம் இல்லையென்றால், அவர்களால் மனப்பூர்வமாக வழிபடப்படுகிற கடவுள் ‘அல்லா’வும் வன்முறைகளுக்கு உள்ளாகும் ஆப்கானிஸ்தான் பெண்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?