பெண்கள் |பேருந்துப் பயணம் | இலவசம் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் |பேருந்துப் பயணம் | இலவசம் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 அக்டோபர், 2026

பெண்களைப் பிச்சைக்காரிகள் ஆக்கிய இலவசப் பேருந்துப் பயணச் சலுகை!

ஓர் ஆணுக்கான பேருந்துக் கட்டணம் ஒரு கி.மீட்டருக்கு ரூ0.56; விரைவுப் பேருந்தில் ரூ0.75[இணையம்]. 
இலவசப் பயணம் ரத்து செய்யப்பட்டால் ஒரு பெண்ணுக்கான கட்டணமும் இதுவேதான்.

தினமும் வெளியூரிலிருந்து நகரத்திற்குக் கூலி வேலை செய்யச் செல்லும் ஒரு பெண்ணின் அதிகபட்சப் பயணத் தூரம் 10 கிலோ மீட்டர் என்றால், அவருடைய ஒருவழிப் பயணத்திற்கு ஆகும் கட்டணச் செலவு ரூ05.60[சாதாரணப் பேருந்து]. விரைவுப் பேருந்து என்றால்ரூ07.50ஒரு ரூபாய் ஐம்பது காசு].

ஒரு பெண் எந்தவொரு[கட்டடத் தொழிலாளியோ வேறு தொழில் செய்பவரோ] வேலையைச் செய்தாலும் அதற்காக அவர் பெறும் குறைந்தபட்ச ஒரு நாள் கூலி ரூ450[நானூற்றைம்பது> இணையம்].

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாள் கூலி ரூ345[அரசின் புதிய ஆணையின்படி].

ஒரு பெண்ணுக்கான ஒரு நாள் வருமானம் ரூ345 என்றே கொண்டாலும், ஒரு நாள் பயணத்திற்கு[இருவழி] அவர் செலுத்தும் அதிகப்பட்சக் கட்டணம்[விரைவுப் பேருந்து] ரூ15தான்.

எனவே, இந்தப் பெண் தொழிலாளிகளைக் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதிப்பது[தொடங்கியவர் ஸ்டாலின்; மேலும் பல சலுகைகள் அளித்துத் தொடர்கிறார் ஜோசப்> இதனால் அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது; தவிர்க்க இயலாத நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் சுணக்கம் நேர்கிறது] தவறு. அனைத்துப் பெண்களையும்[நடுத்தரவர்க்கம் & மேட்டுக்குடி] அனுபதிப்பது தவறு மட்டுமல்ல, மாபெரும் குற்றமும் ஆகும்.

‘ஓசி’ப் பயணம் செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நடத்துநர் வழங்கும் ஒரு சீட்டு 'பூஜ்ஜியக் கட்டண டிக்கெட்'> Zero-Fare Ticket / Zero Value Ticket’ என்று குறிப்பிடப்படுகிறது.

உண்மையைச் சொன்னால், இதைப் பூஜ்ஜியக் கட்டணச் சீட்டு என்பதைவிடவும், ‘பெண்களைப் பிச்சைக்காரிகளாக அடையாளப்படுத்தி அவமானப்படுத்தும் கட்டணச் சீட்டு’ என்றே சொல்லத் தோன்றுகிறது!
                      ================
***‘பயணக் கட்டணத்தைக் கணக்கிடுவதில் தவறு நேர்ந்து, இடுகை வெளியாகி ஒரு மணி நேரம் கழித்தே திருத்தம் செய்யப்பட்டது’ என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். இனி, ‘நல்ல நேரம்’ பார்த்தே பதிவு எழுதுவது தொடங்கப்படும். ஹி... ஹி... ஹி!!!