நான்.....

எனது படம்
இத்தளத்தில் வெளியாகும் பதிவுகள் புதியனவாக இருத்தல் வேண்டும் என்பதே என் விருப்பம். மிகக் குறைந்த ‘பார்வை’களைப் பெற்றப் பழைய இடுகைகளில் தரம் வாய்ந்தவை, புதிய வருகையாளர்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காகவே புதுப்பித்து வெளியிடப்படுகின்றன. அரிதாகச் சில மீள்பதிவுகளாக வெளியிடப்படுதலும் உண்டு.

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

சுட்டெடுத்த அதிரடி சிறு குறு ‘குபீர்’ சிரிப்புக் கதை!

                                                                   நீதிமன்றம்.

அன்று வெள்ளிக் கிழமை. 

கூண்டில் நின்றவரிடம் நீதிபதி கேட்டார்: “நீ ஏன் அவரைக் கொலை செய்தாய்?”

குற்றாவாளி: “பணத்துக்காக.”

“பணத்தை என்ன செய்தாய்?”

“சரக்கடிச்சேன்; உல்லாசமாக இருந்தேன்.”

“கொலை செய்யப்பட்டவரிடம் வேறு என்ன இருந்தது.”

“ஒரு பொட்டலத்தில் கொஞ்சம் ரொட்டியும் மாமிசமும்.”

“அவற்றை என்ன செய்தாய்?”

“ரொட்டியைத் தின்றேன். மாமிசத்தைத் தூக்கி எறிந்துவிட்டேன்.”

“ஏன் அப்படிச் செய்தாய்?”

“அன்று வெள்ளிக்கிழமை, அன்றைக்கு வழக்கமா மாமிசம் சாப்பிடமாட்டேன். ”
**********
***சுட்டுக்கொள்ள அனுமதித்தவர் பெயர், கதை[பழசு] இடம்பெற்ற இதழ் போன்ற விவரங்களைக் குறித்துவைக்கவில்லை. ஹி... ஹி... ஹி!!!