நான்.....

எனது படம்
ஒரு பிரபலமான நடிகனாக மக்களில் கணிசமானவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த விஜய், தேர்தல் பரப்புரையில் ‘ஜோசப்’ஐ மறைத்தார்[சான்றிதழில்> ஜோசப் விஜய்?]. வெற்றிபெற்று முதல்வர் ஆனதில் எவ்விதத் தவறும் இல்லை. முதல்வர் ஆன பிறகும் ‘விஜய்’ ஆகவே தன்னை முன்னிலைப்படுத்தியிருத்தல் வேண்டும். மாறாக, பெயருடன் ‘ஜோசப்’ சேர்த்துத் தன்னை ஒரு கிறிஸ்தவனாக அடையாளப்படுத்தியதோடு, சட்டமன்றத்திலேயே தன் மதத்தவரான சபாநாயகரையும் அமைச்சரையும் அதை உயர்த்திப் பேச அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. தீவிர இந்துமதப் பற்றாளர் பிரதமர் மோடி இதைக் கண்டுகொள்ளாமலிருப்பது ஜோசப்பின் அதிர்ஷ்டம்[நல்வாய்ப்பு]. தான் செய்யும் குற்றங்களை, தன் மீது தீராத மயக்கம்கொண்ட வாக்காளர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்னும் ஜோசப்பின் நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

பருவம் எய்தும் பையன்களுக்கு ‘ஜோசப் மாமா’வின் ‘பட்டு வேட்டி-சட்டை’ பரிசு!!!

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடுகிறார்  த.நா.முதல்வர் ஜோசப் என்பது செய்தி.

முன்னாள் தமிழ்நாடு முதல்வர்களும்  இந்தத் ‘திறப்பு’[தமிழ்நாட்டின் முந்தைய முதலமைச்சர்களான கே. காமராஜ், சி. என். அண்ணாதுரை, எம். ஜி. ராமச்சந்திரன், மு. கருணாநிதி, ஜானகி ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி. மு.க்.ஸ்டாலின் என்று பலரும் தங்கள் ஆட்சிக் காலங்களில் பல்வேறு ஆண்டுகளில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவைத்துள்ளனர்] வேலையை[அரசுப் பணம் வீணடிப்பு]ச் செய்திருக்கிறார்கள் என்பதால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் திறந்தால், அணையிலிருந்து தண்ணீர் வெளியேறாதா என்னும் கேள்வி செல்லுபடி ஆகாது.

திறக்க வருகிற முதலமைச்சர் கோட்டு சூட்டிலா, வேட்டி சட்டையிலா எவ்வாறு அவர் ஆடை உடுத்திருந்தார் என்று கேள்வி எழுப்புவதும் அறிவுடைமை அல்ல, அது அவரவர் விருப்பம் என்பதால்.

ஆனால், சும்மா இருப்பதில் சுகம் காணும் நம்மைக் கேள்விகள் கேட்கத் தூண்டுகிறது ஒரு காணொலி[இரண்டாவது]ச் செய்தி.

ஜோசப் தமிழர்களின் பாரம்பரிய உடை உடுத்திருந்தார் என்கிறது இந்தக் காணொலி. ‘வேட்டி சட்டை’ நம் பாரம்பரிய உடை என்பது சரியே. கீழ்க்காணும் காணொலிச் செய்திதான் நம் மனதைக் குழப்புகிறது.
‘பட்டு வேட்டி சட்டை’யில் பந்தாவாக வருகைபுரிந்தாராம் ஜோசப். பட்டு வேட்டி சட்டையில் ‘பந்தா’ பண்ணும் அளவுக்கு அத்தனைத் தமிழர்களும் வசதி படைத்தவர்களா?

ஜோசப் பட்டு வேட்டி சட்டையில் ‘பக்கா என்ரி’ என்கிறான் ஊடகன். அதென்னா ‘பக்கா’?

சேலமே ஒரு நொடி குலுங்கியதாம். நாம் பல நொடிகள் பொறாமையால் புழுங்கியது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை!

ஜோசப் தமிழர் வாழ்வை மேம்படுத்த அதிசயங்கள் நிகழ்த்துவதாகச் சொல்கிறார்கள். இனி, வயசுக்குவரும் பதின்பருவப் பையன்களுக்குப் ‘பட்டு வேட்டி-சட்டை’ இலவசமாக[தங்க மோதிரம் தருவது போல்]த் தருவாரா இந்த ஜோசப் மாமா?