புதன், 2 செப்டம்பர், 2026

சேலத்தில் ஜோசப் தரிசனம்! தாய்க்குலத்தின் கண்களில் கண்ணீர் வெள்ளம்!!

{செய்தியை வாசிக்கும்[+பட்டு வேட்டி&சட்டையில் தலைவரைத் தரிசிக்கும்] நம் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர்!}

தமிழ்நாட்டை[+ஒட்டுமொத்த இந்தியா]உய்விக்க வந்த அவதாரி ஜோசப் சேலத்திற்கு வரிகைபுரிந்தபோது[மேட்டூர் அணையைத் திறக்கச் செல்கையில்], அவரைக் கண்ட கட்டுக்கடங்காத மகிழ்ச்சியில் தாய்மார்கள் கண்ணீர் பெருக்கினார்கள் என்பது செய்தி.

தாய்க்குலம்[கடந்த தேர்தலில் ஜோசப்புக்கு 108 இடங்களைப் பெற்றுத்தந்தவர்கள்] நேற்று வடித்த ஆனந்தக் கண்ணீர் பெருவெள்ளமாய் உருவெடுத்து, சேலம் மணிமுத்தாறு ஆற்றில் பாய்ந்து நிரம்பி வழிந்து ஓடுகிறதாம்.

தாய்க்குலம் வடித்த கண்ணீர் வறண்டுகிடந்த அந்த  மணிமுத்தாற்றில் வெள்ளமாகப் பெருகி வழிந்தோடுவதை, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று கண்டு அதிசயிக்கிறார்களாம்!

இந்தச் செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!