ஞாயிறு, 2 ஜூன், 2019

பேய்களுக்குக் 'கை விரல்' காணிக்கை!!!

ஐம்புலன்களாலோ ஆறிறிவின் துணையாலோ இந்நாள்வரை நிரூபிக்கப்படாத கடவுளை நம்பியதன்[அனுமானத்தால்] விளைவு, ஆவி, பூதம், பேய், பிசாசு என்று மூதாதையரால் அனுமானிப்பப்பட்ட எதையெதையோ நம்பி இன்றளவும் சீரழிந்துகொண்டிருக்கிறது மனித இனம்.

கடவுளை/கடவுள்களைப் போற்றித் துதிபாடி, விழாக்கள் எடுத்துக் கொண்டாடிப் பூரிக்கும் மனிதர்கள், பேய் முதலானவற்றைத் தீங்கு பயப்பவை என்று நம்பியதால் அவற்றிற்குக் கோயில் கட்டுவதோ விழாக்கள் எடுப்பதோ இல்லை. ஆனாலும்.....

அவற்றிற்கு, கடவுள்களுக்குச் செலுத்துவது போலவே காணிக்கைகள் செலுத்தும் வழக்கத்தை உருவாக்கினார்கள்.

இன்றும்கூட, சில கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் 'பேய் ஓட்டும்'[பெண்களைப் பிடித்த பேய்களை விரட்டுதல்] நிகழ்ச்சிகள் இடம்பெறுவதைக் காணலாம். பேய்களுக்கும் பிடித்தமானவையாகக் கருதப்படும் மது, இறைச்சி போன்றவற்றைப் பூசாரிகளிடம் தொடர்புடைய மக்கள் வழங்குவது உண்டு. பேய் பிடித்த பெண்கள் காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட மதுவை அருந்துவதும் புலாலை உண்பதும் வழக்கத்தில் உள்ளது.

இது விசயத்தில், இந்தோனேசியாவில் உள்ள சில இன மக்கள் பேய்களால் தங்களுக்குத் தீங்குகள் உண்டாகாதிருக்க, பெண்களின் விரலைக் காணிக்கையாக்கும் வழக்கம் உள்ளதை இதழ்கள் வாயிலாக அறிய முடிகிறது.

நேற்றைய[02.06.2019] தினகரன் இதழில் வெளியான ஒரு தகவல் குறிப்பின் நகல் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 31 மே, 2019

'கள்ள உடலுறவு'க்குக் 'கால நேரம்' கிடையாதா?!

கள்ள உடலுறவுக்கு  இடையூறாக உள்ளது என்று தான் பெற்ற குழந்தையைத் தாயே கொன்றுவிடுவதும், கள்ளத்தனமாய்க் காம சுகம் தருபவன் மூலம் அதைச் செய்துமுடிப்பதும் நம் புனித மண்ணில் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருப்பதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. இதற்கு மேற்கண்ட அண்மை நிகழ்வும் ஒரு சான்றாகும்.

ஒத்த மனமும், ஒத்த உடலமைப்பும் ஒத்த புரிந்துணர்வும் இருபாலருக்கும் ஏற்ற வகையில் அமையாதபோது, கணவன் மனைவி என்னும் இருவரில் ஒருவரோ இருவருமோ திருட்டுத்தனமாகப் புணர்ச்சி சுகத்தை நாடுவது உலக வழக்கமாக உள்ளது.

இந்த ஒழுக்கக்கேட்டைத்[?] தவிர்ப்பதற்காக அறிஞர்கள் வகுத்துத்தந்த எந்தவொரு நெறிமுறையும் உரிய அளவில் பலன் தந்ததாகத் தெரியவில்லை.
இம்மாதிரி நிகழ்வுகளை அறிய நேரும்போது என்னை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பெரிய ஐயம் என்னவென்றால்.....

கள்ளத்தனமாய்க் காம இன்பம் அனுபவிப்பவர்கள், உண்ணும் நேரம் உறங்கும் நேரம் நீங்கலாக நாள்முழுக்கக் கட்டிப் பிடித்துக்கொண்டே படுத்திருப்பார்களா? குழந்தை அழுகிற கொஞ்ச நேரம்கூட அந்த ஆசையைக் கட்டுப்படுத்த இயலாதா?

கார்காலம் வந்தால் உண்ணுதலைக்கூடப் புறக்கணித்துப் புணர்ச்சி வெறியுடன் அலையும் கடுவன் நாய்களுக்கும் இவர்களுக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லையே!
=======================================================================