புதன், 2 டிசம்பர், 2020

இறக்கும்வரை இணை பிரியாத சாம்பல் நிற ஓநாய்கள்!!!

பறவைகளைப் பொருத்தவரை, 'ஒருவன் - ஒருத்தி' என்னும் ஒழுக்க நெறியைப் பின்பற்றி வாழ்கின்றன[விதிவிலக்கானவை?]. இவை, தேர்ந்தெடுத்த துணையுடன் வாழ்நாள் முழுக்க இணைந்தே இருக்கும். இது இயற்கை நெறி.

ஆனால், விலங்குகளின் 'இணை சேர்தல்' முறை இதற்கு நேர்மாறானது. ஆடு, மாடு, புலி, சிங்கம் என்று அனைத்து விலங்குகளுமே பருவ மாறுதலுக்கேற்ப, கிடைத்த துணையுடன்  உறவு கொள்கின்றன['மான்கள் இணைபிரியாமல் வாழும்' -'ஐந்திணை ஐம்பது'].. இதுவும் இயற்கை நெறியே ஆகும்.

மனிதர்கள் விலங்கினத்தைச் சார்ந்தவர்கள். சிந்திக்கும் அறிவு வாய்க்கும்வரை இணைசேர்வதில் எவ்விதக்  கட்டுப்பாடுகளையும் பின்பற்றாதவர்கள்.

உடலுறவு சுகத்திற்காகப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் நிலவிய கடும் போட்டி காரணமாக, மோதல்களும் உயிர்ச் சேதங்களும் காலங்காலமாய் நிகழ்ந்துகொண்டிருந்தன. சமுதாய அமைப்பு உருவான பின்னர்,  இது விசயத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; திருமணம் புரிந்து இருவர் இணைந்து வாழும் முறை தோன்றியது. 'ஒருவன்-ஒருத்தி' என்று வாழும் கற்பு நெறி புகுத்தப்பட்டது; போற்றப்பட்டது[பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர்{சான்றோர்} யாத்தனர் கரணம்{திருமணம் முதலான கட்டுப்பாடுகள்/சடங்குகள்} என்ப'  -தொல்காப்பியம், கற்பியல்].

கட்டுப்பாடுகள் பலவும் செயற்கையாக உருவாக்கப்பட்டதால்தான் விலங்குகள் போல வாழும் மனிதர் எண்ணிக்கை இன்றளவும் பெருமளவில் உள்ளதற்கான காரணம் ஆகும்.

இன்னும் விலங்குகளாகவே வாழும் மனிதர்களுக்கிடையே, விலங்கினத்தைச் சார்ந்த சாம்பல் ஓநாய்கள் 'ஒருவன்-ஒருத்தி' என்னும் நெறிப்படி, துணைக்குத் துரோகம் செய்யாமல் வாழ்கின்றன என்பது பெரும் வியப்புக்குரிய உண்மையாகும்.

பாலூட்டி வகையைச் சேர்ந்த இந்தச் சாம்பல் நிற ஓநாய்கள் கூட்டுக்குடும்ப முறையில் வாழ்பவை. முப்பது என்னும் எண்ணிக்கைவரை இணைந்து வாழும் இயல்பு கொண்டவை. ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழ்ந்தாலும், இந்தக் கூட்டத்தில் தலைவன், தலைவி மட்டுமே இணை சேர்ந்து அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றனவாம்.

இந்தச் சாம்பல் நிற ஓநாய்களிடம் இன்னொரு பண்பும் உண்டு. இரை வேட்டையாடப்பட்டதும் தலைவனும், தலைவியும் முதலில் சாப்பிடுவார்கள். அதன் பின்னரே மற்ற விலங்குகள் சாப்பிடுமாம்!

===============================================================
தொடர்புடைய பதிவு[2.12.2012இல் எழுதியது]:

https://kadavulinkadavul.blogspot.com/2012/10/blog-post.html

செவ்வாய், 1 டிசம்பர், 2020

உடலுறவில் அதிசயம் நிகழ்த்தும் சில உயிரினங்கள்!!!

குழந்தை பெறும் தந்தை!

மானுடத்தில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறுவது இயற்கையாக உள்ளது. ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவைச் சுமந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடுகிறது. ஆண் கருமுட்டை மீது விந்து பொழிந்து அதை வளர்க்கிறது. பின்பு குட்டிகளை ஈன்று கடலில் விடுகிறது.

உயிரிழக்க வைக்கும் காதல்!

ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை உடலுறவு கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது. ஓர் ஆண் தேனீ மட்டும் வீர சாகசங்கள் புரிந்து மற்ற ஆண் தேனீக்களை வென்று ராணித் தேனீயுடன் பாலுறவு கொள்ளும். பாலுறவு முடிந்தவுடன் ஆண் குறி உடைந்து பெண்ணுறுப்பிலேயே தங்கிவிடுவதால் இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்து விடும். இதனால் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கும்.

மூட்டைப்பூச்சியின் அட்டகாசம்!

வளர்ந்த ஆண் மூட்டைப் பூச்சி பாலுறவு கொள்ள முயலும் போதுதான் பெண் மூட்டைப் பூச்சிக்குப் பெண் குறி இல்லை என்பதை அறியும். ஆனாலும் அது மனம் தளராமல் தன் ஆண் குறி மூலம் பெண் மூட்டைப் பூச்சியின் உடலில் துளையிட்டு ஒரு பெண்ணுறுப்பை உருவாக்கி அதன் மூலம் பாலுறவு கொள்ளும்.

'அது' முடிந்தவுடன் முடிந்தது வாழ்க்கை!

தேள் மற்றும் சிலந்தி இனங்களில் ஆணும் பெண்ணும் மிகுந்த நேரம் காதல் விளையாட்டுகளில் ஈடுபடும். உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டவுடன் கர்ப்பம் தரித்த பெண் தேளும், சிலந்தியும் செய்யும் முதல் வேலை, தன்னுடன் காதலில் ஈடுபட்ட ஆணைக் கொன்று சாப்பிடுவதுதான்.

அதிகமுறை உடலுறவில் ஈடுபடும் உயிரினம்!

அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் விலங்கு ஷாஜிர்ட் என்ற பாலைவன எலியாகும். இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண் சிங்கம் 55 மணி நேரத்தில் வெவ்வேறு பெண் சிங்கங்களுடன் 157 முறை பாலுறவு கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதனிடம் விலங்கு குணம்!

மனிதனின் தவறான செய்கைகள் என்று கருதப்படும பாலியல் பலாத்காரம், பெண்ணைத் துன்புறுத்தி இன்பம் காணல், பலர் சேர்ந்து இன்பம் பெறுதல் என்பவையெல்லாம் விலங்கினங்களிலும் உள்ளன.

சில முதலையினங்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றன. பாம்பு மற்றும் பூனை வகைகள் துணையைத் துன்புறுத்தி இன்பமடைகின்றன. தவளைகள் கூட்டுக் கலவியில் ஈடுபடுகின்றன. உடலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடிதத ஆண் கழுதை கடித்து உயிரிழந்தவர்கள் ஏராளம்.

நன்றி: https://yarl.com/