திங்கள், 15 மார்ச், 2021

தமிழனுக்கு இணையான 'முழுமூடர் இனம்' தரணியில் இல்லை!!!

‘ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் மசூதியிலிருந்து புறப்பட்டு, நெடுந்தொலைவிலுள்ள ஆலமரம் ஒன்றின் அருகிலிருக்கும் கிணற்றடிக்குச் செல்வது அவர் வழக்கம். அந்தக் கிணற்று நீரில் குளிப்பார்; தன் குடல், கும்பி[இரைப்பை] ஆகியவற்றை வாந்தி எடுத்து, அவற்றின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து அருகிலிருந்த நாவல் மரத்தில் தொங்கவிட்டுக் காய வைப்பார்; மீண்டும் விழுங்கிவிடுவார்!’

மேற்கண்ட இந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் 96 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒரு மகான்[மறைவு: 1918] என்றால் நீங்கள் நம்புகிறீர்களா?

இது போன்ற இன்னும் பல அதிசயங்களை அவர் நிகழ்த்தியதாகச் சொல்கிறார்கள்.

மூன்று அங்குல அகலமும் இருபத்திரண்டு அடி நீளமும் உள்ள நனைக்கப்பட்ட லினன் துணியை விழுங்கி அரை மணி நேரம் போல வயிற்றுக்குள் வைத்திருந்து கக்குவாராம். ‘தவ்தி’ எனப்படும் இந்த யோகப் பயிற்சியை அவர் அடிக்கடி செய்வதுண்டாம். [இதுவும் தொண்டை முதலான உறுப்புகளைச் சுத்தம் செய்யும் ஒரு வழிமுறையோ?]

தவ்தி யோகம் மட்டுமல்லாது, உடல் உறுப்புகள் அனைத்தையும் தனித்தனியாகக் கழற்றிப் பின்னர் ஒன்று சேர்க்கும் ‘கண்ட யோகப் பயிற்சி’யிலும் அவர் வல்லவராம்.

கொஞ்சமே கொஞ்சம் எண்ணையில் தண்ணீர் கலந்து விளக்கு எரித்திருக்கிறாராம்!

வெறும் கைகளையே செக்கில் இட்டு, கோதுமை இல்லாமலே அவர் அரைத்துக் கொடுத்த கோதுமை மாவை ஊர் எல்லையில் கொட்டி வைக்க, கிராமத்தில் பரவியிருந்த காலரா நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டதாம்.

தொலை தூர ஊர் ஒன்றில், உலைக்களத்தில் தவறி விழுந்த ஒரு கொல்லனின் குழந்தையைத் தன் இருப்பிடத்தில் இருந்தவாறே ‘துனி’ எனப்படும் நெருப்புக் குண்டத்தில் கைவிட்டு மீட்டார்.

பேய் மழை பெய்வித்து, இவர் வாழ்ந்த ஊரையே வெள்ளக் காடாக மாற்றிய வருண பகவானின் கோரதாண்டவத்தை, “நிறுத்து உன் சீற்றத்தை” என்று இடிமுழக்கம் செய்து தடுத்து நிறுத்தினார். 

கடுமையான ஆசாரங்களை அனுசரிக்கும் ஓர் அந்தணர், தயங்கியவாறே இந்த மகானைத் தரிசிக்க வந்தபோது, மகான் இருந்த இடத்தில் அவரைக் காணவில்லை; ராமச்சந்திர மூர்த்தி நின்றுகொண்டிருந்தார்! ஸ்ரீராமரின் பாதாரவிந்தங்களை அந்தணர் வணங்கி எழுந்த போது அங்கே அந்த மகானே நின்றுகொண்டிருந்தார்!

’நானே கடவுள்’ என்று சொல்லிக்கொண்ட இவர், 1886 ஆம் ஆண்டு, “நான் கடவுளைக் காணச் செல்கிறேன். திரும்பி வரும்வரை என் உடலைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி உயிர் துறந்து, மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பெற்று எழுந்தார். அதன் பின்னர் முப்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார்.

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அதிசயங்கள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் இந்த மகான்தான், “அல்லாவும் நானே! ராமனும் நானே!” என்று முழக்கமிட்டவர்.

நாம தேவர், கபீர் என்னும் ஞானிகளைப் போல இவரும் ஒரு குழந்தையாக ஆற்று வெள்ளத்தில் மிதந்து வந்த போது கண்டறியப்பட்டார். இவரின் பெற்றோர், பிறந்த இடம் பற்றிய விவரங்களை எவரும் அறியார்.

அளப்பரிய அதிசயங்களை நிகழ்த்திய இந்த மகானின் சமாதியைத் தினம் தினம் சுமார் 50,000 பேர் ’ஷீர்டி’ சென்று வணங்கிச் செல்கிறார்கள்[வியாழன், சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகுமாம்].

இந்த மகான் ஷீர்டி சாயி பாபா என்பது புரியாதவருக்கும் இப்போது புரிந்திருக்கும்.  இந்த ஆளுக்குத்தான் ஊரூருக்குக் கோயில் கட்டிக்கொண்டிருக்கிறான் தமிழன். எனவே, இவனுக்கு இணையான ஒரு மூடர் இனம் உலகில் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள் மறுக்கவா போகிறீர்கள்?


‘சாய்’ என்றால் மகான் என்று பொருள்.

இவர் மகான்களுக்கெல்லாம் அப்பாவாகத் திகழ்ந்தாராம். அதனால், ‘சாயி பாபா’ என்று அழைத்தார்களாம்.

இந்த நாட்டில், நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து, காவியுடுத்து, மழையையும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஒரு மரத்தடியில் ஐந்தாறு நாட்கள் போல எதையாவது முணுமுணுக்கத் தெரிந்தால் அவன் யோகி ஆகிவிடலாம்.

மாந்திரீகங்களும் மாயாஜால வித்தைகளும் கற்றுக்கொண்டால் அவன் மகான் ஆகிவிடலாம்.

“அவர் கட்டித் தழுவினால் தீராத நோய்கள் தீரும்; கை உயர்த்தி ஆசீர்வதித்தால் பாவங்கள் விலகும்” என்பன போல் ‘கட்டுக்கதைகள்’ பரப்ப ஏஜண்டுகள் இருந்தால் வெகு விரைவில் பிரபலம் ஆகிவிடலாம்.

மேலே குறிப்பிடப்பட்டது போல, அவர் அதிசயங்கள் பல நிகழ்த்துவதாகப் பக்கம் பக்கமாக இட்டுக்கட்டி எழுதுவதற்கு ஆனந்த விகடன், குங்குமம் போன்ற வார இதழ்கள், மற்றும் இவை போன்ற இன்ன பிற ஊடகங்களின் ஆதரவும் இருந்தால் வி.வி.வி.ஐ.பிகள் தேடி வந்து காலில் விழும் அளவுக்குப் புகழின் உச்சியைத் தொடலாம்; கோடிகள் சேர்க்கலாம்.

ஷீர்டி சாயி பாபா அதிர்ஷ்டசாலி. ஆனாலும்.....

“நான் சொர்க்கத்திலிருந்து வந்தவன், நானே அல்லா, நானே ராமன், நானே கடவுள்” என்று சொல்லிக்கொண்ட இவரை மகான் என்று புகழ்வது அறியாமையின் உச்சம்; மகானாக ஆக்கப்பட்டவர் என்று சொல்வதே அறிவுடைமையாகும்.

                              ==================

சாயி பாபா பற்றிய குறிப்புகள் இடம் பெற்ற நூல்: ‘ஷீர்டி சாயிபாபா வாழ்க்கைக் குறிப்புகள்’ - ஷீர்டி சாய்பாபா ஆன்மிகம் மற்றும் தர்ம அறக்கட்டளை வெளியீடு, 2014.

சனி, 13 மார்ச், 2021

தற்கொலை புரியும் கள்ளக்காதலர், உறவில் 'உச்சம்' தொட்டவர்களா?!?!

காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள முடியாத ஆணும் பெண்ணும் தற்கொலை செய்துகொள்வது ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. காதலைப் புனிதமானது என்று இளசுகளை நம்பவைத்து, அவர்களை மனநோய்க்கு உள்ளாக்கியது, கவிஞர்கள், கதாசிரியர்கள், திரைப்படக்காரர்கள் போன்றோரின் கைங்கரியம் ஆகும்.

காமம் என்னும் உணர்ச்சிக்குத் தெய்வீகத் தன்மை என்னும் முலாம் பூசியவர்கள் இவர்கள்தான். இதை ஒரு தொழிலாகச் செய்து பிழைப்பு நடத்தும் இவர்கள் திருந்துவார்களேயானால் காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் நிகழவே நிகழாது என்று உறுதிபடச் சொல்லலாம்.

காதலர்களைப் போலவே 'கள்ளக் காதலர்கள்'['கள்ளக் காமுகர்கள்' என்பதே சரியான சொல்லாட்சி] எனப்படுவோரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

கள்ளக் காதலர்கள் எனப்படுவோர், 'கள்ளத்தனமாக, அதாவது, திருட்டுத்தனமாக உடலுறவில் ஈடுபடுபவர்கள் ஆவார்கள். இந்தக் கள்ள உறவு, இவர்களின் சொந்தபந்தங்களுக்குத் தெரியவரும்போது இவர்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்[இடைஞ்சலாக இருக்கும் இல்வாழ்க்கைத் துணைவர்களையோ, இளம் சிறார்களையோ, உறவினர்களையோ தீர்த்துக்கட்டுபவர்களும் இருக்கிறார்கள்] .

உயிரை மாய்த்துக்கொள்வது பொதுவான நிகழ்வு எனினும், அதற்கான காரணங்கள் வேறு வேறானவை.

குடும்ப கௌரவம், அல்லது, தன்மானம் பறிபோவதைத் தாங்கிக்கொள்ள இயலாமை ஒரு முக்கியக் காரணம்.  இது ஆண் பெண் என்னும் இருபாலருக்கும் பொதுவானது.

பெண்ணின் கணவனோ, கணவனின் மனைவியோ, அவர்களைச் சார்ந்தோரோ கண்டிக்கவில்லை என்றால் அல்லது, கண்டுகொள்ளாமல் இருந்தால் கள்ள உறவைத் தொடர்பவர்கள் இருக்கிறார்கள்.

"இனியொரு தடவை ஒன்னா இருக்கிறதைப் பார்த்தா வெட்டிப் போட்டுடுவேன்" என்று தாலி கட்டியவனோ, பெண்ணின் குடும்பத்தார் யாருமோ கடுமையாக எச்சரிக்கை செய்யும்போதுதான், திருட்டுத்தனமாக உடலுறவைத் தொடரும் இருவர் தற்கொலையைத் தேர்வு செய்கிறார்கள்.

அடி உதை பட்டாலும், அஞ்சாமலும் அயராமலும் இன்பசுகம் பகிர்ந்து, கள்ள உறவு பேணும் இணைகளும் இருக்கவே செய்கின்றன.

இனியும் தொடர்ந்தால் நம்மை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள் என்னும் ஆபத்தான நிலை உருவாகும்போதுதான் ஓடிப்போகிறார்கள்; அல்லது, இணைந்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

நமக்குள்ள விடை தெரியாத கேள்வி என்னவென்றால்.....

இனி இணைவது சாத்தியமே இல்லை என்னும்போது பிரிந்து இருந்துவிடலாம்; திருந்தி வாழலாம். 

திருந்தவே இயலாது என்றால், "இவர் இல்லாவிட்டால் இன்னொருத்தர்", "இவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி" என்று இவ்வகையில் மனதைத் தேற்றிக்கொள்ள இருவருமே தவறுவது ஏன்?

"உடலுறவு சுகம் பெறுவதில் என்னை உச்சம் தொட வைக்கும் இவர் போல இன்னொருவர் கிடைக்க மாட்டார்" என்று அவள் நம்புவது காரணமா? "இவளைப் போல ஒத்துழைப்புத் தருவதற்கு இனியொருத்தி வாய்க்க மாட்டாள்" என்று அவனும் எண்ணுகிறானா?

'கள்ளக்காதல் ஜோடி தற்கொலை' என்னும் செய்தியை வாசிக்கும்போதெல்லாம் என் மனதில் எழும் கேள்வி.....

"உயிரினும் மேலாக மதிக்கப்படுகிற இந்தக் கள்ளப் புணர்ச்சி தரும் சுகத்துக்கு ஈடு இணை என்று எதுவும் இல்லையோ?!