வெள்ளி, 18 மார்ச், 2022

'தவ்ஹீத் ஜமாஅத்' போராட்டம்'... தமிழ்நாடு அரசின் செயல்பாடு?

#"மோடியை கண்டும், யோகியைக் கண்டும், சாவைக் கண்டும் அமித்ஷாவைக் கண்டும் அஞ்சாத கூட்டம் இது."

"அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சுகிற கூட்டம் இது." 

"'நிறுத்திக்கொள். நிறுத்திக்கொள். எங்கள் பொறுமைக் குணம் மாறும் முன் நிறுத்திக்கொள். பொறுமையை நாங்கள் இழந்து விட்டால், நீ இருக்க மாட்டாய் புரிந்துகொள்' என்று உணர்ச்சிவசப்படுகிற மக்கள் இங்கு இருக்கிறார்கள்." 

"இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு எதிராக நீதிபதிகள் தீர்ப்புக் கொடுத்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எங்காவது ஒரு பெரும் சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால், ஏதாவது ஒரு விபத்து, ஏதாவது ஒரு அசம்பாவிதம், ஏதாவது ஒரு கொலை போன்ற சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால் அதற்குத் தீர்ப்புக் கொடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பொறுப்பு." 

மேற்கண்ட வகையில், நேற்று மதுரையில் நடைபெற்ற தமிழக 'தவ்ஹீத் ஜமாஅத்' ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டும் பேசப்பட்டும் உள்ளன.#

-என்றிவ்வாறு https://pagadhu.blogspot.com/ என்னும் தளம், 18.03.2022இல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது[தொடர்புடைய காணொலிகளும் அதில் இடம்பெற்றுள்ளன]. மேலும், இந்நிகழ்வு குறித்து, நாராயணன் திருப்பதி தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையும் இப்பதிவில் உள்ளது.

                                          *   *   *   *   *

***மேற்கண்ட பதிவைச் சக பதிவர்களுடன் பகிர்வது மட்டுமே நம் நோக்கம். தனிப்பட்ட விமர்சனம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

நன்றி.

                                          *   *   *   *   *

'நாராயணன் திருப்பதி'யின் அறிக்கை:

#கடந்த இரு தினங்களுக்கு முன், தமிழக 'தவ்ஹீத் ஜமாஅத்' திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும் என்று நான் கோரியிருந்த நிலையில், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், உச்சநீதி மன்ற நீதிபதிகளையும் கொலை செய்வோம் என்று அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டும் தமிழக அரசும், தமிழகக் காவல்துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

மத அடிப்படைவாதச் சக்திகள் வெளிப்படையாகப் பிரதமருக்குக் கொலை மிரட்டல் விடுப்பது தமிழகத்தின் சட்ட ஒழுங்கை, அமைதியை, மத நல்லிணக்கத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.   

நீதிபதிகளைக் கொலை செய்துவிடுவோம் என்று இந்த இயக்கம் வெளிப்படையாகக் கூறியிருப்பது மத அடிப்படைவாதச் சக்திகள் தமிழகத்தில் இயங்குகின்றன என்பதை வெளிப்படையாகக் காட்டுவதோடு, இந்த இயக்கங்கள் நீதியின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையின்றித் தீவிரவாத, பயங்கரவாதப் பாதையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.     

இப்போதே இந்தத் தீய சக்திகளை இரும்புக்கரம்கொண்டு அடக்காவிடில், விரைவில் பயங்கரவாதம் தமிழகத்தில் மையம்கொள்ளும் என்பதைத் தமிழக அரசு உணர வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் தமிழகக் காவல்துறை, அந்தக் கூட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்த அடிப்படைவாத பயங்கரவாத இயக்கத்தைக் சேர்ந்தவர்களைக் கைது செய்ய உத்தரவிடுவதோடு, பயங்கரவாதத்தைப் பரப்பும் தமிழ்நாடு 'தவ்ஹீத் ஜமாஅத்' இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல், மதவாத, பயங்கரவாத இயக்கத்தினால் ஏற்படும் பயங்கர விளைவுகளுக்குத் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டி வரும்.  -நாராயணன் திருப்பதி# 

வியாழன், 17 மார்ச், 2022

வகை வகையாய்ச் சதை வணிகம்!

மனித சமூகத்தில் அன்று முதல் இன்றுவரை தவிர்க்க இயலாத தொழிலாக இருந்துகொண்டிருப்பது 'பாலியல் தொழில்' ஆகும். 

சான்றோர்களால் ஏராளமான ஒழுக்க நெறிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டும்கூட, இத்தொழில் தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணம் ஆண் இனத்தின் வரம்பற்ற பாலியல் இச்சைதான்; வேறு காரணங்களும் உள்ளன.

நம்மை வியப்புக்குள்ளாக்குவது, உலகில் அங்கிங்கெனாதபடி எங்கெல்லாமும் பரவிக்கிடக்கின்ற இந்தப் பாலுறவுத் தொழில் மட்டுமல்ல, இதில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளும்தான்!

வருகைக்கு நன்றி. வாசிப்பைத் தொடரலாம்.

                                        *   *   *   *   *   

தொழிலும் தொழிலாளர்களும்:

*நெடுஞ்சாலைகளிலும் ரயில் நிலையங்களிலும் கால்கடுக்கக் காத்திருந்தும் திரிந்தும்  வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடிப்பவர்கள் ஒரு ரகம். அவசரக்காரகளுக்காகக்  கார்களையும், ஒதுக்குப்புறமான இடங்களில் சாலையோரப் புதர் முதலான மறைவிடங்களையும் இவர்கள் 'இருக்கும்' இடம் ஆக்குவார்கள். அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அல்லாடும் பாவப்பட்ட ஜென்மங்கள் இவர்கள்.

*மசாஜ் பார்லர்கள், இரவு விடுதிகள், பார்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரிபவர்கள் இன்னொரு ரகம். அழைப்பின் பேரில் 'சல்லாபச் சேவை' முடித்து வீடு திரும்புகிறவர்கள் இவர்கள். மேற்கண்டவர்களை நோக்க இவர்கள் பாடு தேவலாம்.

*கடவுளின் கருணையால் கட்டான உடலமைப்பும் அழகும் கவர்ச்சியும் வாய்க்கப்பெற்றவர்கள் பிறிதொரு வகையினர். பணம் படைத்தவர்கள் மட்டுமே இவர்களின் குறி.  தரகர்கள் ஜீவிப்பது இவர்களை நம்பித்தான்.

*விலைமாதர்களில் அதிக விலைபோகிறவர்கள் வேறொரு தரத்தினர்; உயர்தரத் தங்கும் விடுதிகளில் கவர்ச்சி நடனத்தின் மூலம் பணம் அள்ளுவார்கள்; சமுதாயத்தில் பெரிதும் மதிக்கப்படுகிற மேல் மட்ட மனிதர்களுக்கு மட்டுமே 'சதை விருந்து' படைப்பார்கள். சகல வசதிகளும் நிறைந்த வாழ்க்கை இவர்களுக்கானது.

*பணியில் இருந்துகொண்டே துணைத் தொழிலாக இதைச் செய்பவர்களும் இருக்கிறார்கள். அறிமுகமானவர்களின் தாபம் தணிப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்ட புத்திசாலிகள் இவர்கள். இவர்கள் இத்தொழிலில் ஈடுபடுவது அக்கம்பக்கத்தார்க்குக்கூடத் தெரிந்திட வாய்ப்பில்லை.

*சினிமா, சீரியல், விளம்பரம்[மாடலிங்] என்று கலைச் சேவை புரிந்தவாறு 'கலவி'ச் சேவை செய்வதையும் தொழிலாகக் கொண்ட கூட்டம் ஒன்று உண்டு. ரசிகர்கள் இவர்களுக்குக் கோயில் கட்டி வழிபடுவதும் கட்டவுட்டுக்குப் பாலாபிசேகம் செய்வதும்  நடைமுறையில் உள்ளவை என்பதால் இவர்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள்.

*அயல் நாடுகளுக்குச் சென்று பாலியல் பணி புரிந்து பொருளீட்டித் திரும்புகிறவர்களும் உண்டு என்பது கூடுதல் தகவல்.

ஆக,

சதை வணிகம் செய்பவர்கள் பல்வகைத் தரத்தினர் என்பது நாடறிந்த ஒன்று. ஆனால், தரத்துக்கேற்ப, இவர்களுக்கான 'ரேட்' ஐம்பது... நூறு என்று ஆரம்பித்து ஐந்து லட்சம்... பத்து லட்சம்வரை நீளும் என்பது பலர் அறியாத சுவாரசியம்!