ஞாயிறு, 15 ஜனவரி, 2023

‘ஜக்கி’யை ஏக வசனத்தில் போட்டுத்தாக்கும் சமூகச் செயல்பாட்டாளர் ‘சத்தியபிரபு’!!!

‘இதை இப்போதே செய்துமுடிக்க வேண்டும்’ என்பது நம் பெருவிருப்பமாக இருக்கும். ஆனால், அதனைச் செய்வதால் நேரும் பின்விளைவு செய்ய நினைப்பதைச் செய்யவிடாமல் தடுக்கும். இன்று நாளை என்று ஒத்திப்போட்டிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் அந்த நினைப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.

நாம் செய்ய நினைத்த அதே செயலை வேறொருவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் செய்து முடிப்பதை அறிய நேரும்போது அவர் மீது பொறாமைப்படவும் செய்வோம்.

ஆனால், ‘ஜக்கி’ விசயத்தில் நான் செய்ய நினைத்துப் பின்வாங்கிய அதே செயலைச் சமூகச் செயல்பாட்டாளர்[சத்தியபிரபு] ஒருவர் செய்துமுடித்தது, பொறாமைக்கு மாறாக மிக்க மகிழ்ச்சியை அளித்தது{சத்தியபிரபுவைப் பாராட்டி 347 பேர் கருத்துரை[யூடியூபில்} வழங்கியுள்ளனர். எதிர்மறை விமர்சனங்கள் மிகச் சில மட்டுமே}.

பாராட்டுக்குரிய அந்த நண்பரின் ஆக்ரோசமான அதிரடி உரை அடுத்துவரும் காணொலியில் இடம்பெற்றுள்ளது.

ஓரிரு வாரங்களுக்குள் வெளியான, ஜக்கியை விமர்சிக்கும் காணொலிகளும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.






சனி, 14 ஜனவரி, 2023

இது எச்சரிக்கை அல்ல! பணிவுரையும் அல்ல! பரிந்துரை மட்டுமே!

‘இந்தியர்’ என்று ஓர் இனம் எப்போதும் இருந்ததில்லை. மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள், குஜராத்தியர்கள், பஞ்சாபிகள் என்று பல இனத்தவரும் ‘இந்தியர்’ என்னும் பொதுப் பெயரால் தாங்கள் அழைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்களும் ‘இந்தியர்’ என்று தாங்கள் அழைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டு, இந்தியராக, ‘தமிழர்’ என்னும் இனவுணர்வுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இவர்களை ‘இந்தியத் தமிழர்கள்’ என்று சொல்லலாம். 

இந்த இந்தியத் தமிழர்களை, அண்மைக் காலங்களில், ‘நீங்கள் இந்தியராக மட்டுமே இருங்கள்; தமிழராக இருக்கக் கூடாது’ என்று மிரட்டிப் பணியவைக்கும் முயற்சி மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

‘ரவி’ அவர்கள் இந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து அந்த முயற்சி வேகமெடுத்திருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே.

இந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழர்கள் என்றென்றும் இந்தியர்களாகவே இருப்பதற்குப் பெரிதும் உதவுவதாக அமையும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், 'ஆளுநரைத் திரைமறைவிலிருந்து இயக்குவோர் இதைப் புரிந்துகொள்வது நல்லது' என்னும் பரிந்துரையை அவர்களின் முன்வைப்பது எம்மைப் போன்ற சாமானியக் குடிமகனின் கடமையாகும்.