வியாழன், 9 நவம்பர், 2023

பெரியாரின் அருமை புரியாத உளறுவாயன்[ர்?] அண்ணாமலை!!!

“ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியே கடவுளை நம்புகிறவன் முட்டாள்; ஏமாளி. அதனால், கடவுளை யாரும் நம்பாதீர்கள் என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் ஒரு கம்பத்தை நட்டுக் கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது முதல் வேலையாக அந்தக் கம்பத்தை அப்புறப்படுத்தி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் சிலைகள் அங்கே வைக்கப்படும்.....”[https://youturn.in/articles/srirangam-temple-periyar-statue-annamalai.html].

இப்படி அண்ணாமலை[பாஜக] ‘சூசகமாக’ப் பேசியிருப்பதால், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடித்தால் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என்பது உறுதியாகிறது -https://tamil.news18.com.

சூசகமாகவோ வெளிப்படையாகவோ[ஊடகச் செய்தி] அண்ணாமலை வெளியிட்ட இந்தத் தகவல் மூலம், பெரியார் சிலை அகற்றப்படுதல் வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருப்பது தெரிகிறது.


ஆனால், தமிழ்நாட்டில் ‘பாஜக’ ஆட்சியைப் பிடிக்கும்வரை அவர் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதுதான் நமக்குள் எழும் இமாலயக் கேள்வி.


பெரியார் சிலையைப் பிடுங்கி எறிந்தால், தமிழ்நாடு அரசு தன்னைச் சிறையில் தள்ளுமோ என்று அவர் அஞ்சத் தேவையில்லை. 


சிறை செய்தால், ஆயிரக்கணக்கில் நூல்கள் படித்த இந்த அறிஞரேறு, ஆன்மிகக் களிறு அண்ணாமலையை அவமதித்த குற்றத்திற்காக ‘திமுக’ ஆட்சியை நடுவணரசு கலைத்துவிடும் என்பது உறுதி.


தமிழர்கள் கடும் போராட்டம் நடத்தித் தன் உயிருக்கே ஆபத்து விளைவிப்பார்களோ என்றெல்லாம் அவர் அஞ்சத் தேவையில்லை.


போராட்டத்தில் ஈடுபடும் தமிழர்களை ஓட ஓட விரட்டியடித்து முதுகெலும்பை முறித்து, அடக்கி ஒடுக்குவதற்கு மோடியின் அதிகாரத்துக்கு உட்பட்ட பலம் வாய்ந்த ராணுவம் உள்ளது[தேவைப்பட்டால் விமான & கப்பல் படைகளையும் களத்தில் இறக்கலாம்].


எனவே, அண்ணாமலையார் அவர்கள் கிஞ்சித்தும் தன் நெஞ்சத்தில் அச்சத்திற்கு இடம் தராமல் ‘பெரியார் சிலையை அடியோடு பெயர்த்தெடுத்து உடைத்து நொறுக்கும்[பெரியார் விநாயகர் சிலையை உடைத்தது போல]  வேலையை உடனடியாகத் தொடங்குதல் வேண்டும்.


“பெரியார் இருந்திராவிட்டால், அவரின் முக்கியச் சீடர்களில் ஒருவரான கலைஞர் ஆட்சியில்  உன் சாதி பிற்பட்டோர் இனத்தில் சேர்க்கப்பட்டிராது. நீயும் படித்துப் பட்டதாரி ஆகி, காவல்துறை அதிகாரியாக ஆகியிருக்கமாட்டாய். மாறாக, கரூர் பக்கமுள்ள ஏதேனும் ஒரு வறண்ட மானாவாரி நிலத்தில் செம்மறியாடு[வெள்ளாடு மேய்க்கக் கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவை] மேய்த்துக்கொண்டிருப்பாய்” என்றிப்படிச் சொல்லிச் சொல்லி அவரின் மன உறுதியைச் சிதைக்க நாத்திகவாதிகள் முற்படுவார்கள் என்பதால் அண்ணாமலையார் மிக எச்சரிக்கையாகச் செயல்படுதல் வேண்டும்.


ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே இருக்கும் பெரியார் சிலையை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அவரின் அத்தனைச் சிலைகளையும் அவர் அடித்து உடைத்து நொறுக்குவாறாக! இதன் மூலம், தமிழ்நாட்டின் முதல்வர் ஆகவேண்டும் என்னும் அவர் கனவு விரைவில்  நனவாகும்!!


தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் அண்ணாமலையார் வாழ்க... வாழ்கவே!

புதன், 8 நவம்பர், 2023

முஸ்லிம் நாடுகள் ஏழ்மையில் சிக்குண்டிருப்பது ஏன்?[Why Are Muslim Countries Poorer?]

‘யூடியூப்’இல் இடம்பெற்றிருக்கும் மேற்கண்ட காணொலி நேற்று[07.11.2023] என் பார்வையில் பட்டபோது, 'முஸ்லிம் நாடுகள்[பெரும்பாலானவை] ஏழ்மையில் சிக்குண்டிருப்பது ஏன்?[Why Are Muslim Countries Poorer?] என்னும் அதன் தலைப்பு என்னை வெகுவாக ஈர்த்தது.

காரணங்களை அறியும் ஆர்வத்துடன் காணொலியை இயக்கிச் செவிமடுத்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், காணொலி உரையை முழுமையாகப் புரிந்துகொள்வது[குறிப்பாகப் பேச்சாளரின் உச்சரிப்பு] எளிதாக இல்லை.

அது புரியவில்லையாயினும், இஸ்லாம் நாடுகளின் ஏழ்மை நிலை பற்றிச் சிந்தித்ததில் கீழ்க்காண்பவை காரணிகளாக இருத்தல்கூடும் என்று தோன்றியது.

அவற்றுக்கான சிறு பட்டியல்:

*இறை வழிபாட்டிற்கு ஏனைய மதம் சார்ந்தவர்களைவிடவும்  இஸ்லாமியர்கள் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். நாளெல்லாம் கடுமையாக உழைத்தால்தான் முன்னேற முடியும் என்னும் நிலையில், அதற்குத் தேவையான இடையறாத கடும் உழைப்புக்கு ஒரு நாளில் ஐந்து முறை  வழிபடுவது(தொழுவது) இடையூறாக அமைகிறது. [எனவே, “ஐந்தை வாரத்தில் ஒரு முறை(ஞாயிறுகளில்) என்றாக்கினால் அது தவறாகுமா?”என்று கேட்கத் தோன்றுகிறது].

*தங்களின் மதத்தைப் பரப்புவதில் காட்டும் உத்வேகத்தில் கணிசமான பங்கைக்கூட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இஸ்லாமிய ஆடவர்கள்[பெரும்பாலானவர்கள்] காட்டுவதில்லை.

*தாங்கள் நிகழ்த்தும் அத்தனைச் சாதனைகளுக்கும்  இறைவனைக்[எல்லாப் புகழும் இறைவனுக்கே] காரணம் ஆக்கியிருப்பது[இது தனியொரு இஸ்லாமியரின் தன்னம்பிக்கையைக் குறைக்கும் என்று சொல்லலாம்].

*மனிதர்களால் ஆவது ஒன்றுமில்லை என்றெண்ணுவது[இவர்களின் இந்த அவநம்பிக்கையே அறிவியல் முதலான பல்வேறு துறைகளிலும் இவர்கள் பின்தங்கியிருப்பதற்கான காரணம் ஆகும். இஸ்லாமியருக்கும்[ஹமாஸ்] யூதர்களுக்குமான போரில்கூட இவர்கள் அல்லாவைத் துணைக்கு அழைப்பதைப் பல காணொலிகளில் காண முடிகிறது. யூதர்கள் அதைச் செய்யவில்லை].

*இயற்கை, இறைவனின் இருப்பு, படைப்பு குறித்தெல்லாம் தங்குதடையில்லாமல் சிந்திக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு. அந்த உரிமை இஸ்லாம் மதத்தில் பறிக்கப்பட்டுள்ளது[விதிவிலக்காக மிகச் சிலர் இருத்தல்கூடும்]. இந்த நடவடிக்கை சமுதாய வளர்ச்சியில் மிகுதியும் அக்கறை கொண்ட சீரிய சிந்தனையாளர்களும் சீர்திருத்தவாதிகளும் உருவாவதைத் தடுத்திருக்கிறது. இது இஸ்லாம் சமூகத்தவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக மக்களுக்குமான பேரிழப்பாகும்.[இவர்கள் இல்லாமல் தங்களின் சமுதாயம் முன்னேறுவது  சாத்தியமே இல்லை என்பதை இஸ்லாமியர்கள் எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டார்கள்].

*ஆண்களின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மகத்தானது. உரிய வகையிலெல்லாம் தங்களுக்கான பங்கைச் செலுத்த உயரிய கல்வியறிவும் பொது அறிவும் அவர்களுக்குத் தேவை. அவற்றை அவர்கள் பெற்றிட இயலாத வகையில், இஸ்லாமிய நாடுகள் பலவும் பெண்களை வீட்டோடு முடக்கிவிட்டன.

மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது,  இஸ்லாம் நாடுகள் போதிய வளர்ச்சியைப் பெறாததற்கான காரணங்கள் மேற்கண்டவை.

                            *   *   *   *   *
இஸ்லாமியரின் நலன் கருதி வெளியடப்பட்டுள்ளது இந்தச் சிறிய ஆய்வு. உணர்ச்சிவசப்படாமல், குறிப்பிடப்பட்டவற்றில் சில குறைகளையேனும் அவர்கள் களைந்திட முயல்வார்கள் என்பது நம் நம்பிக்கை.

“இஸ்லாம் வாழ்க” என்று சொல்வதில் நமக்கு நாட்டம் இல்லை! “இஸ்லாமியர் வாழ்க... வளர்க” என்று வாழ்த்துவதில் எவ்விதத் தயக்கமும் இல்லை!!