வெள்ளி, 26 ஏப்ரல், 2024

அழகர் வர்றாரு! அர்ச்சகர் சாமி கூடவே வர்றாரு!!


ஓ, கூமுட்டைகளே.....

“வர்றாரு... வர்றாரு... அழகர் வர்றாரு” என்பது காணொலித் தலைப்பு.

கள்ளழகர் தானாக நடந்து வரல; மனுசங்க நீங்க சுமந்து வர்றீங்க.

அழகரோடு இன்னொருத்தரும் வர்றாரே, அவரையும் ஏன் சுமக்கிறீங்க மக்களே?

அவர் தரையில் நடந்துவந்து தீபாராதனை காட்டினா அழகர் அங்கீகரிக்கமாட்டாரா?

பல்லக்கில் அவரே ஏறிக்கொண்டாரா, நீங்க ஏத்திவிட்டீங்களா?

அவர் அறிவுஜீவி ஆன்மிகர்; அர்ச்சகர். நீங்க கூமுட்டைகள்; கூடை கூடையாக மூடநம்பிக்கை சுமப்பவர்கள்.

ஆகவே.....

“நானும் சாமி பரம்பரைதான். ஏத்திவிடுங்கடா”ன்னு அவர் சொல்லியிருப்பாரு. ஏத்திவிட்டுட்டீங்க.

அந்தக் கல்லுச் சாமியோடு[சிலை] இந்தக் குண்டுச் சாமியையும் சுமக்கிறீங்க.

சுமந்தாத்தான் புண்ணியம் கிடைக்கும். செத்த பிறகு சொர்க்கலோகம் போகலாம்; சுகபோகத்தில் மிதக்கலாம்.

கூமுட்டைகளா, அலுங்காம குலுங்காம குண்டுச் சாமியைச் சுமந்துட்டுப் போய் அழகர் சாமியோடு வைகையில் குளிப்பாட்டுங்கடா!
                             *   *   *   *   *
குறிப்பு:
சில நாட்களுக்கு முன்பே இப்பதிவு வெளியாகியிருத்தல் வேண்டும். தாமதத்திற்கு வருந்துகிறேன்.

வியாழன், 25 ஏப்ரல், 2024

நம்பிக்கைகள்... ஒரு சிறு/குறு ஆராய்ச்சி!

 மூடம் - அறியாமை.

அறியாமை மற்றும் பகுத்தறிதல் இன்மையால் வெளிப்படும் நம்பிக்கை ‘மூடநம்பிக்கை’ எனப்படும்[Superstitious beliefs are an outcome of ignorance and lack of rational thinking...]

‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத  கட்டுக்கதை, சூன்யம் போன்றவற்றின்மீது மக்கள் கொள்ளும் நம்பிக்கை’ என்றும் சொல்லலாம். [‘Some believe that a superstition is anything that people believe that is based on myth, magic, or irrational thoughts. - dazeinfo[website]

‘அறிவின் துணைகொண்டு, காரணங்களை ஆராயாமல் மூதாதையர் சொல்லிப் போனவற்றை நம்புவது’ என்றும் விளக்கம் தருகிறார்கள்[Superstition is credulous belief or notion, not based on reason, knowledge, or experience. -Wikiquote].

சங்கம் மருவிய காலக்கட்டத்தில் இதை ‘இயற்கை இறந்த நிகழ்ச்சி[Super Natural] என்று குறிப்பிட்டார்கள்[மூடநம்பிக்கைக்குத் தங்க முலாம் பூசியிருக்கிறார்கள்!].

இராமாயணத்தில் சீதை வான ஊர்தியில் கடத்தப்பட்டது; பாரதத்தில், கடவுளே மண்ணுலகுக்கு வருகை புரிந்து மனிதர்களுடன் உறவாடியது; தேரோட்டியது; சிலப்பதிகாரத்தில், கண்ணகி மார்பகத்தைக் கையால் திருகித் துண்டாக்கி எறிய மதுரை நகரம் தீப்பற்றி எரிந்தது; மதுராபுரிப் பெண் தெய்வம் அவள் முன் தோன்றிப் பேசியது; மணிமேகலையில், அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்தால் மக்களுக்கு மணிமேகலை உணவு வழங்கியது போன்ற நிகழ்வுகள் இதற்கு உதாரணங்களாகும்.

நம்பிக்கை[belief]க் குடும்பத்தின் ஓர் அங்கமே மூடநம்பிக்கை[superstition]. ஏனையவை, அவநம்பிக்கை[disbelief], தன்னம்பிக்கை[self cofidance] ஆகியன[belief, trust, hope என்னும் மூன்றுமே நம்பிக்கை என்னும் பொருள் குறித்தனவே.

“நான் வெல்வேன்” என்று இயல்பாகச் சொன்னால், அது நம்பிக்கை.

“வென்றே தீருவேன்” என்று அடித்துச் சொன்னால், தன்னம்பிக்கை.

“நான் வெல்வேனா?” என்று சந்தேகத்துக்கு இடமளித்தால், அது அவநம்பிக்கை.

“குறுக்கே பூனை வந்தது. நான் தேர்வாகமாட்டேன்” என்று புலம்பினால்  மூடநம்பிக்கை.

‘அவநம்பிக்கை, அறிவுபூர்வமான நம்பிக்கை என்று எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம்’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். 

எந்த அடைப்படையில் இப்படிச் சொன்னார் என்பது அறியப்படவில்லை.

‘வெல்வேன்’ என்று நம்பியவன் தோற்றுப்போனால், அவனின் நம்பிக்கை பொய்த்ததே தவிர, அது மூடநம்பிக்கை ஆகிவிடாது.

‘பூனை குறுக்கே வந்ததால்...’ என்று பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒரு காரணத்தைச் சேர்க்கும்போதுதான் அது மூடநம்பிக்கை ஆகிறது.

https://kadavulinkadavul.blogspot.com/2024/04/blog-post_25.html