புதன், 14 ஆகஸ்ட், 2024

ஒற்றை ஆண்! உடலுறவுக்கு 10,000 பெண்கள்!!

கொல்கத்தா மருத்துவமனையில் 2ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்றுவந்த பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கொடூரச் செய்தி யாவரும் அறிந்ததே.


இது குறித்த உடற்கூறு ஆய்வறிக்கையில்[போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்], "பெண் டாக்டரின் கண்களிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் கசிந்திருந்தது. முகத்திலும் ஒரு நகத்திலும் காயங்கள் இருந்தன. உதடு, வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, மோதிர விரல் ஆகியவற்றிலும் காயங்கள் காணப்பட்டன. கழுத்து எலும்பு உடைந்துள்ளது. அந்தரங்கப் பாகங்களில் ரத்தம் கொட்டியிருந்தது" என்று கூறப்பட்டுள்ளது. 


கருத்தரங்க[செமினார்] அறையில் கிடந்த ப்ளூடூத் ஹெட்போன், சிசிடிவி கேமரா போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவனைக் காவல்துறையினர்[சிபிஐ] கைது செய்துள்ளனர். 


வன்கொடுமையின்போது, சஞ்சய் ராயின் பிடியிலிருந்து தப்பிக்க, பெண் டாக்டர் நிறையவே போராடியிருக்கிறார். ஆனால், சஞ்சய் ராய் பெண் டாக்டரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறான். இவ்வளவு கொடூரத்தைச் செய்துள்ள அந்தக் கயவன், தற்போது தன்னுடைய குற்றத்தைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டதோடு, "நீங்கள் ஆசைப்பட்டால் என்னைத் தூக்கில்கூடப் போடுங்கள்" என்றானாம்[விரிவான செய்திக்கு*… https://tamil.oneindia.com].


இவனுடைய அலைபேசியில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சார்ந்த காணொலிகளே[வீடியோக்கள்] அதிகம் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


அவற்றை ஆராய்ந்ததில் இவன் உடலுறவு வெறியனாகவும்,  கொடூரக் கொலைகாரனாகவும் ஆவதற்கு இவன் பார்த்துப் பார்த்து ரசித்த அந்த ஆபாசக் காணொலிகளே காரணம் என்பது அறியப்பட்டுள்ளது[இவனைப் போன்ற, ஆனால், துணிச்சல் இல்லாத நீலப்படப் பித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது].


ஆபாசப் படங்கள் அதிகரிக்கிற அதே வேளையில் அதில் பங்குகொள்கிற நடிகர்&நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்புதான்.


ஓரிரு நாட்களுக்கு முன்பு மாத இதழொன்றின்[உயிர்மை] கட்டுரையில் இடம்பெற்றிருந்த குறிப்பிடத்தக்க செய்திகளின் நகல் பதிவு கீழே.



குறிப்பிட்ட ஒரு நடிகனின் அனுபவங்களை விவரிப்பதே இக்கட்டுரை. 

இவனுடன் உடலுறவில் பங்களிப்புச் செய்தவர்கள் 10000 பெண்கள் என்றால்.....

இவனைப் போன்ற அசிங்க நடிகர்களின் எண்ணிக்கையைக் குத்து மதிப்பாகக் 500 அல்லது 1000 என்று அனுமானித்தால்,  அவர்களுடன் உறவுகொண்ட பெண்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் என்று எகிறும்.

தடுப்பாரின்றி, தொடர்ந்து இந்த ஆபாசப் படங்களின் வரவும் படப் பங்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தால்.....

கட்டுப்பாடற்ற காம வெறியாட்டங்களால்  நாள்தோறும் பல பெண் டாக்டர்களோ, பெண் பொறியாளரோ, பிற பெண் அலுவலர்களோ குடும்பப் பெண்களோ வன்புணர்வு செய்து சிதைத்துக் கொல்லப்படும் அவல நிலை உருவாகும்.

உலகின் அத்தனை நாடுகளும் ஒருங்கிணைந்து, ஆபாசப் படங்கள்[உணர்ச்சியைத் தூண்டுவதைத் தவிர, இவற்றில் கற்றுக்கொள்ள எதுவுமில்லை; ஓரளவுக்கேனும் திருப்திகரமான[“இது போதும்” என்னும் மனம் தேவை. இல்லையேல் தெரு நாய்கள் படும்பாடுதான்]  அந்தரங்க உறவு முறையை, தேவைப்படும் ஆடவர்களுக்கு, அதற்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் கற்றுத் தரலாம்] வெளியாவதை முற்றிலுமாய்த் தடுப்பது காலத்தின் கட்டாயம்.

                              *   *   *   *   *

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

கடவுள் கையில் சூலம் எதற்கு? முதுகு சொறியவா?!

 

 · 
பின்தொடர்

#கடவுளைக் கும்பிடவேண்டும். அவருக்குப் பூஜை செய்யவேண்டும்; கோவில் கட்டவேண்டும், 

கோவிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிடுவது போதாதென்று வீட்டில் ஒரு பூஜை அறை வைக்கவேண்டும். அதில் தினமும் இருவேளை சாமி கும்பிடவேண்டும். 

ஆனால், இப்படிக் கும்பிடுகிறவர்களை நிலநடுக்கம், பேய் மழை, நிலச்சரிவு போன்றவற்றை உண்டுபண்ணிப் பூண்டோடு கடவுள் அழிப்பார்; விபத்தில் சிக்க வைத்துச் சின்னாபின்னப்படுத்திச் சாகடிப்பார்; கொரோனாவில் சிக்கிச் சித்திரவதைக்குள்ளாக்கிப் பரலோகம் போகவைப்பார்; டெங்குவில் வதைபட்டு, ‘டிங் டிங் டிங்’குன்னு சாவு மணி அடித்து யமலோகம் அனுப்புவார். மனிதர்களை இத்தனைக் கொடூரங்களுக்கு உள்ளாக்கும் கொலைகாரக் கடவுளை எதற்கு வணங்கவேண்டும்?

செத்தவர்கள் எல்லோரும் ராமனைச் செருப்பால் அடி அடி அடி என்று அடித்தவர்களா? நிலச்சரிவில் புதையுண்டவர்கள் எல்லாம் பிள்ளையாரை முச்சந்தியில் போட்டு உடைத்தவர்களா? ‘அர்த்தமுள்ள பொந்து மதம்’ எழுதிய கண்ணதாசன் ஏன் 56 வயதிலேயே செத்தார்? ரமண மகரிஷி ஏன் புற்று நோயால் புட்டுகிட்டாரு? சங்கராச்சாரிக்கு முன்னாடி இருக்கிற‌ இன்டிகேட்டர் ஏன் அவுட் ஆகி கண்ணாடி போட்டுக்கொண்டார்?

மேற்கண்ட அவலங்களைத் தடுக்க முடியாது என்றால் கடவுள் எதற்கு? 


அவர் கையில் சூலம் எதற்கு? முதுகு சொறியவா?


தட்டையான வேல் எதற்கு? ஆம்லெட்டைத் திருப்பிப் போடவா?#

                      *   *   *   *   *

*** மேற்கண்டது ‘கடவுள் நம்பிக்கை தேவையா?” என்னும் கேள்விக்கு அழகிரிசாமி அவர்கள் அளித்த பதில். அவருக்கும் ‘Quora'வுக்கும் நம் நன்றி.


முக்கிய அறிவிப்பு:

இந்து மதத்தை மட்டும் சாடுவதாக எவரும் மனக்கொதிப்புக்கு உள்ளாக வேண்டாம். இஸ்லாம், கிறித்தவம் என்று பிற மத மூடத்தனங்களையும் நாம் விட்டுவைப்பதில்லை.