திங்கள், 2 செப்டம்பர், 2024

இது ஒன்றே உலக அதிசயம்! ஏழு என்பது தவறு!!

சீனப் பெருஞ்சுவர்[8850 கி.மி], மெக்ஸிகோவில் உள்ள ‘மாயன்’ நகரம், இது 16ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியின்போது பயன்படுத்தப்பட்ட ரகசிய இன்கா கோட்டையான வில்காபாம்பா[மச்சு பிச்சு], ஜோர்டானின் பெட்ராவில் உள்ள கஸ்னா ("கருவூலம்"), ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்துவின் சிலை, ‘ரோம்’இல் உள்ள கொலோசியம்[மனிதர்கள் மனிதர்களுடனும் விலங்குகளுடனும் போரிடும் அரங்கம்], தாஜ்மகால் ஆகியவற்றை உலகின் 7 அதிசயங்கள் என்பார்கள்.

இவை அனைத்துமே அதிகப்பட்ச மனித அறிவால் உருவாக்கப்பட்டவையே.

இவற்றை, கள்ளக் காமுகனுடனான உடலுறவுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, பெற்றெடுத்த தாயே தன் குழந்தையைக் கொன்றுவிடும் அதிசயத்தோடு[பாசத்தைப் பணயம் வைக்கும் அளவுக்குக் காமம் அத்தனை வலிமையானதா?!] ஒப்பிட்டால் இவை அதிசயங்களே அல்ல!

மற்ற நாடுகளில் எப்படியோ, நம் புண்ணியப் பாரதத்தில் இத்தகைய அதிசயங்கள் அவ்வப்போது[அடிக்கடி?] நிகழ்வதை எண்ணி நாம் பெருமிதப்படலாம்!

வாழ்க பெண்ணினம்! வாழ்க வளர்க அவர்களின் கள்ள உடலுறவு!!  


எடுத்துக்காட்டாக ஓர் அதிசயம்:

#ப.வேலுார்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொலை செய்த தாய் உள்பட இருவரை, பரமத்தி வேலுார் போலீசார் கைது செய்தனர்#Dinamalar Logo

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

விஞ்ஞானிகளின் பாதம் பணிந்து ஒரு விண்ணப்பம்!!!

"சிஓபி[COB>ஒரு வட்டமான நிறை, கட்டி அல்லது குவியல்] முற்றிலும் விண்மீன் திரள்களால் ஏற்படுகிறது" என்று லாயர்[விஞ்ஞானி] கூறினார். "விண்மீன் திரள்களுக்கு வெளியே பார்த்தால், அங்கே இருளைக் காண்கிறோம், அதற்கு மேல் எதுவும் இல்லை."["The simplest interpretation is that the COB is completely due to galaxies," Lauer said. "Looking outside the galaxies, we find darkness there and nothing more."Scientists confirm that most of the universe is 'darkness and nothing more' (msn.com)]

அறிவியலாளரே,

விண்மீன் திரள்களிலா, அவற்றிற்கு வெளியே பரவிக்கிடக்கும் இருளிலா, இருளுக்கு அப்பால் வெற்றிடம் இருந்தால், அந்த வெற்றிடத்திலா கடவுள் எங்கே இருக்கிறார் என்பதை அதி விரைவில் கண்டுபிடித்துச் சொல்லுங்கய்யா.

அந்தக் கண்டறியப்படாத கடவுளை வைத்துக்கொண்டு இங்குள்ள மதவாதிகளும், மகான்கள் அவதாரங்கள் எனப்படும் ஆன்மிகவாதிகளும் செய்யும் அலப்பறை கொஞ்சநஞ்சமல்ல.

இவர்களால் மக்கள் பக்திப் பித்தர்களாகிக் கோயில் கோயிலாக அலையும் பரிதாபத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

ஆகவே.....

மேற்கண்ட இடங்களில் கடவுள் எங்கேனும் ஒளிந்துகொண்டிருக்கிறாரா, அல்லது அப்படியான ஒரு நபர் எங்கேயும் இல்லையா என்பதை விரைவில் கண்டறிந்து அறிவியுங்கள் அய்யா!