வெள்ளி, 25 அக்டோபர், 2024

இந்தியா தேசமல்ல; தேசங்களை இணைக்கும் ஒன்றியம் மட்டுமே!!!

இந்திய ஒன்றியத்திற்கென்று தனியே இறையாண்மையோ, தேசிய இனமோ, மொழியோ, ஏன் ஒரு பிடி மண்ணோ கூடக் கிடையாது. இவை அனைத்தும் அந்தந்தத் தேசிய இனங்களுக்கு மட்டுமே உண்டு; அவை வாழும் நாடுகளுக்கு மட்டுமே உண்டு!

உங்கள் தேசியம்(Nationality) எது என்று கேட்டால் நீங்கள் உங்கள் தேசிய இனத்தின் பெயரைத்தான் குறிப்பிட வேண்டும். உதாரணமாக: “என் தேசிய இனம் தமிழர். நான் இந்திய ஒன்றியத்தில்{ராணுவதின் துணையுடன் தேசியங்களை[மாநிலங்களை]ப் பாதுகாக்கும் கூட்டமைப்பு} அங்கமாக இருக்கும் தமிழ்க்குடிமகன்(Citizenship)” என்பது உங்களின் பதிலாக இருத்தல் வேண்டும்.

ஒரே மொழி ஒரே மதம் ஒரே நாடு என்று இந்தியப் பாஜக அரசு பேசுவது என்பது அத்தனைத் தேசிய இனங்களின் இறையாண்மைக்கும் எதிரான தாக்குதல் ஆகும். இது ஒன்றியத்தின் ஒற்றுமைக்கு விடுக்கப்பட்ட சவால்!

இப்படிப் பேசுகிறவர்களின்{இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த ஆரிய வந்தேறிச் சிறுபான்மை[இந்தி வெறியர்களுடன் இணைந்து]க் குழுவினர்} நோக்கம் ஒன்றியத்தில் இருக்கும் அனைத்துத் தேசிய இனங்களையும் அழித்துவிட்டு அதாவது, அவர்களது அடையாளங்களை அழித்துவிட்டு[ராணுவத்தின் துணையுடன்] தங்களுக்கான ஒரு மொழி(சமஸ்கிருதம்), மதம்(பிராமணீயம்) கொண்ட நாட்டை(இந்து ராஷ்டிரம்) நிர்மாணிப்பதுதான்.

இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்துத் தேசங்களும்[மாநிலங்கள்] ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஆதிக்க இந்தி/இந்துத்துவா வெறியர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்திட வேண்டிய ஆபத்தான நேரம் இது.


நன்றி:


கனிஷ்கர் மாறன்[Quora]

வியாழன், 24 அக்டோபர், 2024

“நான் கடவுளின் குழந்தை” -மோடி! “கடவுள் என் வழிகாட்டி” -சந்திரசூட்!! “கடவுள் அல்ல சாத்தான்” -மக்கள்!!!

இந்தியத் தலைமை அமைச்சர்[பிரதமர்]மோடி:

''நான் சாதாரண மனிதனே இல்லை; கடவுளின் குழந்தை.''[https://tamil.abplive.com/news/india/pm-narendra-modi-said-i-am-convinced-i-am-not-born-biologically-getting-this-energy-as-god-sent-me-to-do-his-work-184390]

தலைமை நீதிபதி[உ.நீ.மன்றம்] சந்திரசூட்:

BBC News தமிழ் 

அயோத்தி வழக்கில் எனக்கு ஒரு வழியை காட்டுங்கள் என கடவுளிடம் கேட்டேன் -டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி