வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

2இல் 1 நடந்தால்தான் இவன்[ஜக்கி] அடங்குவான்!!!

ஜக்கி வாசுதேவனுக்கு மெய்யான ஆன்மிகம் தெரியாது, குறைந்தபட்சச் சிந்திக்கும் அறிவுகூட இல்லாதவன். சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு போலி ஆன்மிகம் பேசி ஊர் உலகை ஏமாற்றித் திரிகிறான்; மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ‘லட்சம் கோடி’க்கும் மேலாகச் சொத்துச் சேர்த்திருக்கிறான்.

தஞ்சைப் பெரிய கோயில் சிலைக்குள் ஒன்றுமில்லை என்று சொல்லித் தனக்குள்தான் கடவுள்[விவாதங்களுக்கு உட்பட்டவர் கடவுள்] இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு இவனுக்குத் தைரியம் இருக்கிறது.

இப்போதைக்கு இவனின் ஒரு தாடி மயிரைக்கூட எவராலும் பிடுங்க முடியாது என்பது நம்மை அளப்பரிய துயரங்களுக்கு உள்ளாக்குகிறது. 

இவன் அடங்க வேண்டுமானால்.....

இவன் மூளையில் மீண்டும் ரத்தக் கசிவு ஏற்பட வேண்டும்.

அல்லது,

மோடி ஆட்சி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

காலம் பதில் சொல்லும்!
                                       
                                       *   *   *   *   *
குமரிகளைக் கூட்டம் சேர்த்துக்கொண்டு இவன் அடிக்கும் கொட்டம்; கும்மாளம் காண்பீர்.




வியாழன், 27 பிப்ரவரி, 2025

பிரதமர் மோடியின் ஆட்சி... '-’!!! ‘+’???

*இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு முட்டாள்களின் எண்ணிக்கை மேதகு மோடியின் ஆட்சிக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. ‘கும்பமேளா’ கூத்தடிப்புக்கு இதில் முக்கியப் பங்குண்டு. 

*நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் அளவுக்கு, கற்பனையான புராணக் கதை மாந்தர்களுக்குக் கோடிகளில் செலவழித்துக் கோயில் கட்டுகிறார். பக்திப் பயணம் என்னும் பெயரில் வெட்டியாய் ஊர் சுற்றும் மூடர்களுக்கு வசதிகள் செய்துதரப் பெரும் தொகை செலவிடப்படுகிறது.

*பக்தி தொடர்பான தன்னுடைய நடவடிக்கைகளை இவரளவுக்கு எந்தவொரு பிரதமரும் விளம்பரம் செய்ததில்லை. சிந்திக்கும் அறிவை வளர்ப்பதற்கு எதிரான நடவடிக்கை இது.

*கடும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் சாமியார்களுக்கு அதிக அளவில் மரியாதை தருகிறார்; நிரந்தரப் பாதுகாப்பும் உண்டு.

*அயல்நாட்டு உறவுகளை மேம்படுத்தப் பயணம் தேவைதான் என்றாலும், அதையே காரணம் காட்டி உலகம் சுற்றுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார் நம் பிரதமர்.

*போதுமான ஆதாரங்கள் இல்லாமல் “அதைச் செய்தேன்; இதைச் சாதித்தேன்” என்று வெறும் வாயால் அடிக்கடி வடை சுடுகிறார்.

*குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க் கட்சிக்காரர்களுடன் விவாதித்து, அவை குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை.

*அடிக்கடி, சட்டங்களைத் திருத்தி மசோதாக்களை நிறைவேற்றும் நடவடிக்கைகள், கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக்கொள்ளும் முயற்சியில் இவர் தொடர்ந்து ஈடுபடுகிறாரோ என்று எண்ணத் தூண்டுகிறது.

*பிரச்சினைகளைக் கையாளுவதற்கும், வளர்ச்சித் திட்டங்களை வகுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கும் தேவையான அறிவாற்றலும் அனுபவமும் பெற்றவர்கள் இவரின் அமைச்சரவையில் இல்லை என்றே சொல்லலாம்.

*பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியைக் கருத்தில் கொண்டுதான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன; மாநிலங்களுக்கென்று அதிகாரங்களும் வழங்கப்பட்டன. அதை அலட்சியப்படுத்தி, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார் மோடி. மாநில அரசுகளால் இந்த அடாத செயல் சுட்டிக்காட்டப்படினும் தன்னைத் திருத்திக்கொள்ள அவர் தயாராக இல்லை.  

மேற்கண்டவை மோடி ஆட்சி குறித்த மதிப்பீட்டு[-]ப் பட்டியல்!

‘+’?..... தேடித் தேடித் தேடிக் கண்டறிக!!