ஒன்று தலையிலும் மற்றொன்று வயிற்றுக்கு அருகிலும் உள்ளன[one inside their skulls, and a second, more primitive brain that is back near their abdomen].
இந்த உள்ளமைவு, அவை தலையை இழந்தாலும்கூட, தொடர்ந்து நகர உதவுகிறது.
கரப்பான் பூச்சிகள் இந்த அமைப்பைப் பயன்படுத்தி வேகமாக நகர்கின்றன; பொருள்கள், முகங்கள், இடங்கள் போன்றவற்றை நினைவில் கொள்கின்றன.
அவற்றின் மூளை மனிதர்களின் மூளையை விட மிக மிக மிகச் சிறியது. ஆனால், அவற்றில் இரண்டு மடங்கு ‘சினாப்ஸ்கள்’ [நரம்பணுக்களின்(neurons) இடையே தகவல்களைக் கடத்துபவை]உள்ளன. இதனால் அவை தகவல்களைச் சிறப்பாகச் சேமித்துச் செயல்படுகின்றன.
‘ஆபரேஷன் சிந்தூர்: ஐசி-814, புல்வாமா குற்றவாளிகள் உட்பட 100 பயங்கரவாதிகள் பலி' என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது நம் ராணுவம்[மோடி அரசின் அனுமதியுடன்][https://tamil.indianexpress.com/india/]
பலியான 100 தீவிரவாதிகளில், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த முடாஸர் காடியன்காஸ் & காலித் என்ற அபு அகாஷா; ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்த முகமது யூசுப் அசார், ஹபீஸ் முகமது ஜலீல் & முகமது ஹசன் கான் ஆகியோர் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியில்,‘புல்வாமா குற்றவாளிகள் உட்பட’[இது பழைய[2019] நிகழ்வு. இது பற்றி இப்போது குறிப்பிடத் தேவையில்லை>19 குற்றவாளிகளை அடையாளம் கானப்பட்டனர். ஆகஸ்ட் 2021 வாக்கில், முக்கிய குற்றவாளியும் ஆறு பேரும் கொல்லப்பட்டனர்> விக்கிப்பீடியா]என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, பஹல்காமில் 26 பேரைப் படுகொலை செய்த நான்கு தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் இடம்பெறாதது ஏன் என்பது நம் கேள்வி.
போர் முடிவடைந்துவிட்ட நிலையில் அரசின் இயலாமையை மறைத்து.....
100 பேர்களில் அவர்களும் அடக்கம் என்பது போல் செய்தி வெளியிட்டு, மோடி தான் மேற்கொண்ட சபதத்தை[“அவர்கள் பிடிக்கப்பட்டு நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்குத் தண்டனை வழங்கப்படும்”> மோடி]நிறைவேற்றப்பட்டுவிட்டதாக மக்களை நம்பச் செய்வதன் உள்நோக்கம் என்ன?
உள்நோக்கத்தை அனுமானித்துச் சொல்ல நாம் விரும்பவில்லை.