திங்கள், 1 செப்டம்பர், 2025

எச்சரிக்கை!... இருதயத்தைக் காக்க இதயப்பூர்வமான அக்கறை தேவை!

//சவீதா மருத்துவக் கல்லூரியின் ஆலோசகரும், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணருமான 39 வயதே ஆன டாக்டர் கிராட்லின் ராய்[மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்] புதன்கிழமை மருத்துவமனையில் சரிந்து விழுந்தார்//*

ஸ்டென்டிங் மூலம் அவசர ஆஞ்சியோபிளாஸ்டி, இன்ட்ரா-அயோர்டிக் பலூன் பம்ப், ECMO(Extracorporeal Membrane Oxygenation> a life-sustaining machine that acts as an artificial heart and lung for critically ill patients whose own organs cannot provide enough oxygen and blood to the body] என்றிப்படி இயன்றவரை சிகிச்சை அளித்தும் சக மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற இயலவில்லை என்பது மாரடைப்பு எத்தனை அபாயகரமானது என்பதை அறியச் செய்கிறது.

இம்மாதிரியான திடீர் இதய நோய்த் தாக்குதலுக்கு மருத்துவ வல்லுநர்கள் பட்டியலிடும் காரணங்களாவன:

*மிகப் பல மணி நேரப் பணி[மருத்துவர்கள் பெரும்பாலும் ஒரு நாளைக்கு 12-18 மணிநேரம் பணி செய்கிறார்கள்; சில நேரங்களில் தொடர்ந்து[ஒரே ஷிப்டில்] 24 மணி நேரத்திற்கும் மேலாக..... > இது ஏனையத் துறைகளில் பணி செய்வோருக்கும், தொழில் முனைவோருக்கும் பொருந்தும்].

*கடுமையான மன அழுத்தம்[மருத்துவர்கள் தம் மீதான நோயாளிகளின் அதீத நம்பிக்கையைத் தக்கவைத்திடப் பெரிதும் கவலைப்படுவதாலும், வாடிக்கையாளரைத் தக்க வைத்திடப் பல்வகைத் தொழில் செய்வோர்  ஓய்வின்றிக் கடினமாக உழைப்பதாலும் ஏற்படுவது].

*ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள்[மருத்துவர்களும் விதிவிலக்கல்லர்]. 

*உணவு உண்பதில் ஒழுங்கின்மை. 

*முறையான உடற்பயிற்சியின்மை.

*எதிர்கொள்ளும் தீராத பிரச்சினைகளால் உண்டாகும் உடல் சோர்வு, மனச்சோர்வு, பதற்றம் ஆகியன.

இதயம் பற்றி முழுமையாக அறிந்துகொண்டிருக்கும் மருத்துவர்களே அதன் தாக்குதலுக்குப் பலியாகிறார்கள் என்றால், அது குறித்துப் போதிய அறிவில்லாதோரின் நிலை?

இளம் வயதிலும் உயிர்களைப் பலிகொள்ளும் முக்கியக் காரணிகளில் ஒன்று இதய நோய் என்பதை எவரும் மறத்தல் கூடாது.

*https://www.tamilmurasu.com.sg/tamilnadu/39-year-old-heart-surgeon-dies-heart-attack

சனி, 30 ஆகஸ்ட், 2025

சல்லாபச் சாமியார் ‘ஜக்கி’யும் சிந்திக்கத் தெரியாத அப்பாவிப் பக்தர்களும்!!!

சத்குரு[சத்துக்குரு ஜக்கி] புனிதக் கைலாய யாத்திரையை நிறைவு செய்து இன்று(29/08/2025) தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விக்குச் சத்குரு பதிலளிக்கையில், “மூளை அறுவைச் சிகிச்சைக்குப்[ஜக்கிக்கு 2 முறை மூளை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன> இரண்டாவது சிகிச்சை எப்போது எங்கே நடந்தது என்பது யாருக்கும் தெரியாது] பிறகு, மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியைக் காட்டுகிறது” எனக் கூறினார்[தினகரன் செய்தி].

இந்த ஆள், கைலாசப் பயணமாகட்டும் சொர்க்கத்துக்கான ‘டூர்’ ஆகட்டும் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியட்டும். அது நமக்கு ஒரு பொருட்டல்ல; நம்மைக் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்குவது.....

‘யோக விஞ்ஞானச் சக்தி’தான் தன்னை இமாலயப் பயணம் மேற்கொள்ளச் செய்தது என்று ‘புருடா’ விட்டதுதான்.

‘யோகா’ என்னும் பயிற்சி நாம் அறிந்தது. ‘விஞ்ஞானம்’ பற்றியும் நமக்குத் தெரியும். அதென்ன ‘யோகா விஞ்ஞானம்’?

‘யோகா’ என்பது மூச்சுப் பயிற்சியை உள்ளடக்கிய ஒரு வகையான உடற்பயிற்சி மட்டுமே; மனப்பயிற்சியும்[ஆய்வுக்குரியது]  அதில் அடங்குவதாகவே இருக்கட்டும். இதில் விஞ்ஞானம் புகுந்தது எப்படி?

யோகா விஞ்ஞானமாம்!

இந்த அறிவியல் நுட்பத்தை இந்த ஆள் கற்றது எங்கே? எப்போது? மக்களுக்குத் தெளிவாக[புரியாத எதையெல்லாமோ பேசிப் பேசித் தன்னைச் ‘சத்குரு’[கடவுளின் குரு] ஆக்கிக்கொண்ட மோசடிப் பேர்வழி இந்த ஆளாக்கும்]ப் புரியும்படி விளக்க இயலுமா?

மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணிப்பதையே தொழிலாக்கிக் கோடி கோடியாய்ச் சம்பாதித்த இந்தக் ‘கேடி’க்குக் கடும் தண்டனை வழங்கப்படுதல் மிக முக்கியம். 

அதிகார வர்க்கத்தின் முழு ஆதரவு அதைத் தடுக்கிறது.

‘யோகா விஞ்ஞானச் சக்தியால், மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரையை நடத்திமுடித்ததாகச் சொல்லும் இந்த ‘டூப்பிளிகேட்’ சாமியாரால், அறுவைச் சிகிச்சைகளுக்குக் காரணமான ‘மூளை ரத்தக் கசிவை’த் தடுக்க இயலாமல்போனது ஏன்?

இது மக்கள் கேட்கவேண்டிய கேள்வி.

எப்போது கேட்பார்கள்?

இந்தப் போலி ஆன்மிகவாதி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிப் பெரும் போராட்டம் நடத்துவது எப்போது?

காத்திருப்போம்.

                                           *   *   *   *   *

https://www.dinakaran.com/news/kailash_yatra_sadhguru/